எது சந்தர்ப்பவாத கூட்டணி?: வாசன் ஆவேசம்
சென்னை:
தமிழக மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாக திமுக- காங்கிரஸ் கூட்டணி உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் வாசன் கூறியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முடிவாகிவிட்டது என்றும், இது சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாார்.
தமிழக மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. சந்தர்ப்பவாதக் கூட்டணி எது என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும். அதிமுக- பா.ஜ.க. கூட்டணி தோல்வியடையப் போவது உறுதி.
இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மத்திய அரசு பறித்துள்ளது. அவற்றைத் திரும்ப அளிக்கவேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதித்து வருகிறேன். அவர்களுடன் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை டெல்லி சென்று கட்சி மேலிடத்திடம் தெரிவிப்பேன். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு சீட் வேண்டும் என்பதை மேலிடத்திடம் வலியுறுத்துவேன் என்றார்.
முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு, குமரி அனந்தன், சோ.பாலகிருஷ்ணன் ஆகியோரை வாசன் சந்தித்துப் பேசினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications