வரலாறு படைக்கப் போகும் விருதுநகர் திமுக மாநாடு!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

திமுக தலைவர் கருணாநிதியின் கூற்றுப்படி, விருதுநகரில் நடைபெறவுள்ள திமுக பிராந்திய மாநாடு, தேர்தல்அறிக்கையை வெளியிடும் கூட்டமாக நடைபெறவுள்ளது.

விருதுநகரில் மார்ச் மாதம் திமுக தென் பிராந்திய மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை மிகப்பிரமாண்டமாக நடத்த திமுகவினர் முடிவு செய்துள்ளனர். அதற்குப் பல காரணங்கள் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் நடைபெறவுள்ளது. எனவே இந்த மாநாட்டின்போதுதிமுக தேர்தல் அறிக்கையும், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைதிமுக தலைவர் கருணாநிதியும் சில நாட்களுக்கு முன்பு சென்னை பேட்டியொன்றில் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின்போது தேர்தல் தொடர்பான புதிய கூட்டணி குறித்து திமுக முறைப்படி அறிவிக்கும் என்றுதெரிகிறது. புதிய பொலிவுடன், புதிய கூட்டணியுடன் விருதுநகர் மாநாட்டை திமுக நடத்தவுள்ளதால் மிகப்பெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டவும் திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், தா.கிருட்டிணன் படுகொலைக்குப் பிறகு தென் மாவட்ட அளவில் நடைபெறும் முக்கிய திமுக நிகழ்ச்சிஎன்பதால் இந்த மாநாட்டின் மூலம் திமுகவின் பலத்தை ஆணித்தரமாக நிரூபிக்க திமுக தலைமை முடிவுசெய்துள்ளது.

இதற்கிடையே, மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம்பேசுகையில், திமுகவின் தேர்தல் பிரசாரம் விருதுநகர் மாநாட்டிலிருந்து தொடங்கவுள்ளது. தலைவர் கலைஞர்அறிவித்தபடி, தேர்தல் அறிக்கையும், வேட்பாளர் பட்டியலும் மாநாட்டின்போது வெளியிடப்படும்.

ரூ. 1 கோடி செலவில் மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை-விருதுநகர் தேசியநெடுஞ்சாலையில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மாநாட்டுவளாகத்திற்கு அண்ணாவின் பெயரும், மேடைக்கு தா.கிருட்டிணன் பெயரும் சூட்டப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

பல வகையிலும் விருதுநகர் மாநாடு திமுகவின் வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறப் போகிறது என்பது மட்டும்உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+