மதுரை: திமுகவையே விஞ்சும் அதிமுக கோஷ்டி பூசல்
மதுரை:
மதுரை அதிமுகவில் சமீப காலமாக நடந்து வரும் கோஷ்டிப் பூசல் தகராறுகள் திமுகவையே மிஞ்சி விடும்அளவுக்கு படு பயங்கரமாக போய்க் கொண்டிருப்பதாக அதிமுக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
ஸ்டாலின், அழகிரி கோஷ்டி மோதலால் பல காலமாக படாதபாடு பட்டு வந்த மதுரை திமுக, தா.கிருட்டிணன்படுகொலைக்குப் பிறகு கோஷ்டிப் பூசல் இன்றி அமைதியாக உள்ளது. ஆனால் திமுகவை ஆட்டிப் படைத்து வந்தகோஷ்டிப் பூசல் இப்போது அதிமுகவுக்கு இடம் மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவில் சமீப காலமாக கோஷ்டிப் பூசல் வலுத்து வருகிறது. குறிப்பாக மாவட்ட செயலாளராக இருந்து வந்தசெல்லூர் ராஜு மீது கடும் அதிருப்தியுடன் மதுரை அதிமுகவினர் உள்ளனர். அதற்குக் காரணம் சமீபத்தில் பட்டப்பகலில் நடந்த ஒரு கொலைச் சம்பவம்.
அதிமுகவைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் பட்டப் பகலில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இவரைக் கொன்றது செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்தக் கொலைதொடர்பாக செல்லூர் ராஜு உள்ளிட்ட சிலர் மீது வழக்கும் பதிவாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கையிலும் செல்லூர்ராஜுவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து செல்லூர் ராஜுவை பதவியிலிருந்து நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. இருப்பினும் அவர்இன்னும் சுதந்திரமாக இருந்து வருகிறார். சென்னை கொளப்பாக்கத்தில் நடந்த அதிமுக நேர்காணல் நிகழ்ச்சிக்கும்சென்று வந்துள்ளார். இதனால் மதுரை அதிமுகவினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
திமுக கோஷ்டிப் பூசலை பெரிதாக்கிப் பார்த்த நமது பொதுச் செயலாளர் செல்லூர் ராஜுவை மட்டும் விட்டுவைத்திருப்பது ஏன்? அவரது பதவியைப் பறித்தது வெறும் கண் துடைப்பா என்று மதுரை அதிமுகவினர்குமுறுகின்றனர். செல்லூர் ராஜூவும் கொல்லப்பட்ட பால்பாண்டியும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆனால், இதில் ராஜூவோ சசிகலாவின் கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர். இதனால் அவரைக் காப்பாற்ற சசிகலா தரப்புமுயல்வதாக பால்பாண்டியின் மறவர் பிரிவினர் கூறுகின்றனர்.
இதனால் அதிமுகவின் முதுகெலும்பாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்துக்குள்ளேயே பிரிவு ஏற்பட்டுள்ளது.
பால்பாண்டி ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவரது உறவினரான ஏ.கே.போஸ் என்பவருக்குமாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பால் பாண்டியின் உறவினர்களும்,ஆதரவாளர்களும் இன்னும் அதிருப்தியுடன்தான் உள்ளனர். செல்லூர் ராஜுவை கைது செய்தால்தான் தாங்கள்சமாதானம் அடைவோம் என்று அவர்கள் உறுதியாக கூறி வருகிறார்கள்.
எம்.எல்.ஏ- கவுன்சிலர் மோதல்:
செல்லூர் ராஜு விவகாரம் இப்படி இருக்க, இன்னொரு விவகாரம் சமீபத்தில் மதுரையைக் கலக்கியது.திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல், தன்னை காவல் நிலையத்தில் வைத்தே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக அதிமுக கவுன்சிலர் போஸ் என்பவர், மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில்பகிரங்கமாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரை அதிமுக கவுன்சிலர்களே நையப்புடைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். சீனிவேல், செல்லூர்ராஜுவின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இந்த இரு சம்பவங்களையும் திமுகவினர் அரசியல் ரீதியாகவும்,ஜாதி ரீதியாகவும் பயன்படுத்தி ஆதாயம் தேட முனைந்து வருகின்றனர்.
தா.கி. படுகொலையில் மட்டும் படு சுறுசுறுப்பாக செயல்பட்ட தமிழக ஆட்சியாளர்கள், பால்பாண்டிபடுகொலையில் மட்டும் பெருத்த மெளனம் சாதிப்பது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள். இது தொடர்பாகமதுரை நகரில் போஸ்டர்களும் ஒட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
அதிமுகவில் கள்ளர் பிரிவைச் சேர்ந்த முக்குலத்தோருக்கு மட்டுமே மரியாதை கொடுக்கப்படுவதாகவும், மற்றபிரிவுகளான மறவர், அகமுடையார் ஆகிய பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் மறவர்,அகமுடையார் பிரிவுத் தலைவர்களால் பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவும்கிடைக்க ஆரம்பித்துள்ளதால் அதிர்ச்சியில் உள்ளது அதிமுக.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications