ராணுவ ஆளெடுப்பில் கூட்ட நெரிசல்: போலீஸ் தடியடியில் 20 பேர் காயம்
கடலூர்:
கடலூரில் ராணுவத்திற்கு நடந்த ஆளெடுப்பின்போது ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில் 20 பேர் காயமடைந்தனர்.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று ராணுவத்தின் சலவையாளர் மற்றும் துப்புறவாளர் பணிக்குஆளெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 10மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு திரண்டனர்.
10,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு அரங்கில் கூடியதால் அங்கு கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும்ஏற்பட்டது. இந் நிலையில் 1,000 பேருக்கு மட்டும் நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கூடியிருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்தனர். கூடுதலாக ஆட்களைத் தேர்வு செய்யக் கோரிஅவர்கள் முண்டியடித்தனர்.
இதையடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் இளைஞர்கள் நாலாபுறமும்சிதறி ஓடினர். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த களேபரத்தில் விளையாட்டு அரங்கத்தின் ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications