மேட்டூர் அணை இன்று மூடல்; கவலையில் விவசாயிகள்!
சேலம்:
தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால் மேட்டூர் அணை இன்று மூடப்பட்டது.
காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளின் பலத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் முதல்வாரம் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவிட்டது. மிகக் குறைந்த அளவே நீர் இருப்பு இருந்ததால் தொடக்கத்தில்விநாடிக்கு 5000 கன அடி நீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விடப்பட்டது.
ஆனால் அந்த தண்ணீர் போதாது என்று நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததால்விநாடிக்கு 12,000 கனஅடியாக நீர் திறப்பு மாற்றப்பட்டது. இதையடுத்து வெகுவேகமாக நீர் இருப்பு குறையத்தொடங்கியது.
இந் நிலையில் இன்று காலை 11.30 மணியுடன் அணை மூடப்பட்டது. அணையின் நீர் இருப்பு 30 அடி அளவுக்குகுறைந்துவிட்டால் அணை மூடப்படுவதாகவும், அணையில் 7.99 டி.எம்.சி தண்ணீரே உள்ளது எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடை மடை பகுதிகளான நாகை, திருவாரூர் பகுதி நிலங்களுக்குஇன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை என்று அப் பகுதி விவசாயிகள் சோகத்துடன் கூறுகின்றனர்.
பிப்ரவரி மாத இறுதிக்குள் தண்ணீர் கிடைத்தால்தான் கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிரை ஓரளவாவதுகாப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் அணையில் தண்ணீர் இல்லாததால் அதுசாத்தியமில்லை, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால்தான் உண்டு என்கிறார்கள் அதிகாரிகள்.
மழையும் பொய்த்துப் போய், கர்நாடக அரசும் தண்ணீர் திறந்து விடாமல், இருந்த மேட்டூர் அணைத் தண்ணீரையும்திறந்து விட்டு விட்ட நிலையில் சம்பா பயிர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications