நெடுமாறன் ஜாமீன் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தாக்கல் செய்திருந்தஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல இன்னொரு வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியது.
ஆனால், மறைந்த புலிகள் இயக்க முன்னோடி கிட்டு குறித்து புத்தகம் எழுதியது தொடர்பாக நெடுமாறன் மீதுஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கிலும் ஜாமீன் கோரி நெடுமாறன் மனு தாக்கல்செய்தார்.
மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், நீதிபதியை அதிரடியாய் மாற்றியது தமிழகஅரசு. இதையடுத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்கு ஜாமீன் மனுநிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதே வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்நெடுமாறன். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பெரிய கருப்பையா இன்று நெடுமாறனின் மனுவைத் தள்ளுபடிசெய்வதாக அறிவித்தார்.
மேலும், நெடுமாறன் மீது ஆலந்தூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இன்னும் 1 மாதத்திற்குள் விசாரித்துமுடிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து நெடுமாறனின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில்,
செங்கல்பட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளோம். நெடுமாறன்மீதான வழக்கை 1 மாதத்தில் முடிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக விசாரித்து முடிக்க முடியாத ஒரு வழக்கை 1 மாதத்தில் விசாரித்து முடிக்குமாறுகூறியுள்ளதிலிருந்து, இந்த வழக்கில் அரசியல் கரங்கள் எந்த அளவுக்கு நீண்டுள்ளது என்பது தெளிவாகத்தெரிகிறது என்றார்.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் நெடுமாறன் சார்பில் மேல் முறையீட்டு ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நாளை நீதிபதி ஏ.கே.ராஜன் விசாரணை நடத்துவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications