74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை:
தமிழகம் முழுவதும் 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போலியோ ஒழிப்புக்காக இந்தியா முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 40,000 முகாம்களில் 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், குடும்ப நல மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள்,பால்வாடிகள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள்அமைக்கப்பட்டிருந்தன.
மொத்தம் 1.7 லட்சம் பேர் சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கல்லூரி, பள்ளி மாணவ,மாணவியரும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் 965 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. எழும்பூர்குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் முகாமைத் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகொடுக்கப்பட்டது. சொட்டு மருந்து கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு இன்று வீட்டுக்கு வீடு சுகாதாரப்பணியாளர்கள் சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கவுள்ளனர். எனவே இந்த வாய்ப்பை தவறாமல்பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications