3 தொகுதிகளைக் கேட்கும் புதிய நீதிக் கட்சி!
சென்னை:
எந்தக் கூட்டணியில் எங்களுக்கு இடம் கிடைத்தாலும் 3 எம்.பி. தொகுதிகளை கேட்போம், கிடைக்காவிட்டால்தனித்துப் போட்டியிடுவோம் என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு சற்று முன்பாக உதித்த புதிய நீதிக் கட்சி, தேர்தலில் சந்தித்த படுதோல்விக்குப் பிறகுஅமைதி காத்து வந்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி மீண்டும் புத்துயிர்பெற்றுள்ளது.
இக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகுசெய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடன்கூட்டணி வைப்பது தொடர்பாக இதுவரை எந்த அரசியல் கட்சியும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இருப்பினும், எந்தக் கூட்டணியில் நாங்கள் இடம் பெற்றாலும் 3 தொகுதிகளைக் கேட்போம். கிடைக்காவிட்டால்15 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு எங்களது பலத்தை நிரூபிப்போம். எந்ததெந்த தொகுதிகளில்போட்டியிடுவது என்பது குறித்து பிப்ரவரி 3ம் தேதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்என்றார்.
கூட்டத்தில், வ.உ.சிதம்பரனாருக்கு மணி மண்டபம் கட்டுவது, முதலியார்கள், பிள்ளைமார்கள், சேனைத் தலைவர்ஆகிய பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள்விடுத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications