எம்.பி. தேர்தல்: மதுரையில் ஜெயலலிதா போட்டி?
மதுரை:
வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா போட்டியிடக் கூடும் என்றுதெரிகிறது.
முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் சசிகலா நிறுத்தப்படலாம் என்று அந்தக்கட்சியினர் இடையே பேச்சு இருந்து வருகிறது.
இந் நிலையில் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற மதுரை அதிமுக பிரமுகர்கள் கூட்டத்தில்,மதுரை தொகுதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் தேர்தலுக்கு முதல்வர் ஜெயலலிதாவை முன்னிறுத்துவது என்றும், அதற்காகமதுரை மக்களவைத் தொகுதியில் அவரைப் போட்டியிடச் செய்வது என்றும் அக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவதுஅணி அமைத்து பிரதமர் பதவியைப் பிடிப்போம் என ஜெயலலிதா பேசி வந்தார். இப்போது அப்படிப்பட்ட அணிஅமைவது சாத்தியமா என்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அதிமுகவின் மதுரைப் பிரிவின் சார்பில்நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தீர்மானத்தில் 2020ம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்கும் முழுத் தகுதி ஜெயலலிதா ஒருவருக்கேஉள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும். அதற்குதொண்டர்கள் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் விரலசைவு இல்லாமல் அமைச்சர் தலைமையில் இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கவாட்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
அதே நேரத்தில் திண்டுக்கல் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.முக்குலத்தோரின் அமோக ஆதரவுடன் இந்தத் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் பலமுறை வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தொகுதியின் மீது சசிகலா தரப்புக்கு ஒரு கண் உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications