ஓரிரு நாட்களில் வைகோ ஜாமீன் மனு தாக்கல்
சென்னை:
ஓரிரு நாட்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்வார் என்று அக் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் மதிமுக நிர்வாகிகள் இன்றுதிமுக தலைவர் கருணாநிதியை முதல் முறையாக சந்தித்தனர்.
எல்.கணேசன், பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த எல்.கணேசன், திமுகவுடன் உறவு தொடர்ந்து நீடிக்கும். இரு கட்சிகளுக்கும்கொள்கை, கோட்பாடுகளில் வித்தியாசம் கிடையாது. எனவே இந்த உறவும், கூட்டணியும் தொடரும்.
இன்னும் ஓரிரு நாட்களில் ஜாமீன் கோரி வைகோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்என்றார்.
கருணாநிதி கூறுகையில், மதிமுக தலைவர்களுடன் அரசியல் குறித்துப் பேசவில்லை. கூட்டணியில் சேருவதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸுடன் பேச்சு நடந்து வருகிறது. இதுவரை நடந்தபேச்சுவார்த்தை திருப்தியைக் கொடுத்துள்ளது.
எங்களது கூட்டணிக்கு பாமக வரும் என்று எதிர்பார்க்கிறேன். அவர்களது பதிலும் சாதகமாகத்தான் உள்ளது.
காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதியாக யார் சென்னை வருகிறார்கள், எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதைநாளை டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளார்கள் என்றுநினைக்கிறேன்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்து கூட்டணி முழுமை பெறும்.
தமிழக அமைச்சரவையிலிருந்து 2 பேர் நீக்கப்பட்டது பெரிய விஷயமல்ல. இது வழக்கமானது தானே என்றார்கருணாநிதி.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications