நெடுமாறன் ஜாமீனில் விடுதலை: சிறையில் இருந்து வெளியே வருகிறார்
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்தஜாமீனையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியாகிறார்.
முதலில் பொடா வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில்ஜாமீன் கிடைத்தது.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் காவியத் தலைவன் கிட்டு என்ற புலிகள் ஆதரவு புத்தகத்தைவெளியிட்டதற்காகப் போடப்பட்ட வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் ஜாமீன்கிடைக்காததால் நெடுமாறன் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதியை தமிழக அரசு திடீரென மாற்றியது. இதையடுத்துபூந்தமல்லி நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் நேற்று ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். இதை இன்று விசாரித்த நீதிபதி ராஜன்,நெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நெடுமாறனை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முயன்ற தமிழக அரசின் கடும் முயற்சிகளையும் மீறி அவர்ஜாமீன் பெற்றுள்ளார்.
அவர் மீதுள்ள அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து விட்டதால் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள்நெடுமாறன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17 மாத சிறை வாசத்திற்குப் பின் கடலூர்சிறையிலிருந்து நெடுமாறன் வெளியே வருகிறார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications