கூட்டணி: 12ம் தேதி முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்
சென்னை:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வருகிற 12ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக வரும் 12ம்தேதி நடக்கவுள்ள அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
கூட்டணி விவகாரம் தொடர்பாக நாங்கள் அவசரம் காட்டவில்லை. அரசியல் விவகாரக் குழுவின் முடிவுக்கேற்பதோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
பாரதீய ஜனதாவிடம் 10 தொகுதிகள் தருமாறு நான் கேட்டதாக அக்கட்சியின் அகில இந்திய செயலாளர்இல.கணேசன் கூறியுள்ளார். அது தவறான தகவல். நாங்கள் அப்படி கேட்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதியுடன் அவ்வப்போது நான் பேசுவது வழக்கமானதுதான். எனவே நான் அவருடன்தொலைபேசியில் பேசிக் கொள்வதை வைத்து திமுகவுடன் கூட்டணி பேசுவதாக கருதுவது தவறு.
பா.ம.க. அந்தரத்தில் தொங்குகிறது, சந்தர்ப்பவாதத்தில் இருக்கிறது என செய்திகள் போடுகிறீர்கள். பா.ம.கவைத்தனிப்படுத்தி விமர்சிக்க காரணம், எஙகள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி தான். பத்திரிக்கை சுதந்திரம் என்றுவிட்டுவிட்டாலும் இது போன்ற புகார்களுக்கு எந்தக் கட்சியும் தப்பாது.
கூட்டணி விஷயத்தில் நாங்கள் அவசரம் காட்ட வேண்டும். தேர்தல் வந்துவிட்டதா? அறிவிப்புவெளியிடப்பட்டுவிட்டதா?
12ம் தேதி அரசியல் தலைமைக் குழு எடுக்கும் முடிவுக்குப் பின் கருணாநிதியை சந்திப்பேன். மற்றும் பிறதலைவர்களையும் சந்திப்பேன். தமிழகத்தில் அதிமுக தவிர பிற கட்சிகள் அனைத்துடனும் நாங்கள்தோழமையாகவே இருந்து வருகிறோம். 2001ல் அதிமுக கூட்டணியை விட்டு தன்மானத்தைக் காத்துக் கொள்ளநாங்கள் வெளியேறினோம். இப்பேதும் அதே நிலையில் தான் உள்ளோம்.
எந்த அரசியல் கூட்டணியும் நிரந்தரமில்லை. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுகிறது. அடுத்த தேர்தல் வரை கூடகூட்டணி நீடிப்பதில்லை என்றார் ராமதாஸ்.
10 சீட் கொடுத்தால் கூட்டணி என்ற ராமதாசின் அழைப்புக்கு திமுகவோ, அதிமுகவோ பதிலே தரவில்லை. இதனால்இரண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டுவிடுவதைத் தவிர்க்கவே 12ம் தேதி அரசியல் விவகாரக் குழுவைக் கூட்டி ஒருமுடிவை அறிவித்துவிடுவது என்ற திட்டத்துக்கு வந்துள்ளார் ராமதாஸ்.
இந் நிலையில் அக்கட்சி திமுக அணிக்கே வரும் என்று இன்று மீண்டும் கருணாநிதி உறுதிபடக் கூறியுள்ளார்.துரைமுருகன்- ராமதாஸ் இடையே நடந்து வரும் ரகசிய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே கருணாநிதிஇவ்வாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் வரதராஜன், கூட்டணி குறித்த தனது முடிவைபா.ம.க. விரைவில் அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications