8 மதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா? மாலை தெரியும்
சென்னை:
பொடா வழக்கில் கைதாகி சிறை வாசம் அனுபவித்து வரும் 8 மதிமுக பிரமுகர்களின் ஜாமீன் மனுக்கள் மீதானவிசாரணை இன்று பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது. மாலையில் தீர்ப்பு வெளியாகும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோமற்றும் 8 மதிமுக பிரமுகர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வைகோ தவிர மற்ற 8 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர். ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் கழித்தவர்களுக்கு சாதாரண ஜாமீன் விதிமுறைகளே பொருந்தும்என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து செவந்தியப்பன், மதுரை இளவரசன், கணேசன், கணேசமூர்த்தி உள்ளிட்ட 8 மதிமுகவினரின்ஜாமீன் மனுக்கள் மீது சிறப்பு பெஞ்ச் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக வழக்கறிஞர்கள்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற உயர் நீதிமன்றம்இன்று விசாரணை நடக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நீதிபதி பி.டி.தினகரன்,நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று காலை மதிமுகவினரின் ஜாமீன் மனுக்கள்விசாரணைக்கு வந்தன.
மனுக்களைப் பரிசீலித்த நீதிபதிகள் பிற்பகலில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். இதனால் இன்றுமாலைக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோ காவல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
இந் நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக்காவல் வருகிற 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வைகோ உள்ளிட்ட 8 மதிமுகவினரும் (உடல் நலம் சரியில்லாத மணியம் தவிர) பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மதுரையைச் சேர்ந்த முத்துசாமி என்ற சாட்சியிடம், வைகோ தரப்புவழக்கறிஞர்களான தினகரன் மற்றும் பிரியகுமார் இருவரும் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தனர்.
அதன் பின்னர் தனது குறுக்கு விசாரணையை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்குமாறும், புதன்கிழமைக்குகுறுக்கு விசாரணையை நீட்டிக்குமாறும் தினகரன் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் புதன்கிழமை தான்நீதிமன்றத்திற்கு வர இயலாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து வருகிற 12ம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிராஜேந்திரன் வழக்கை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications