19 ம் தேதி கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 19ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலத் தலைமைச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் கோஸ்வாமி இதற்குத் தலைமை வகிப்பார்.
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இக் கூட்டம் நடந்தது. அதில் வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மத்திய அரசு வழங்கிய யோசனைகளை கர்நாடகம் நிராகரித்தது. ஆனால், தமிழகம்,கேரளம், பாண்டிச்சேரி மாநிலங்கள் ஏற்றன.
வரும் 19ம் தேதி நடக்கும் கூட்டத்திலும் தமிழகத்தின் சார்பில் வறட்சி கால நீர் பகிர்வு குறித்த திட்டத்தைஉடனடியாக அமலாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படும். இந்த முறையும் மத்திய அரசின்யோசனையை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்த யோசனைகள் திட்டமாக்கப்பட்டு அதை அமலாக்கும் வகையில்உத்தரவுகளை கண்காணிப்பு ஆணையம் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. மேட்டூரில் நீர் இருப்பு மிகவும் குறைந்துஅபாயகரமான அளவுக்கு வறண்டு போயுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை நேற்று மூடப்பட்டது. இதனால்தஞ்சை மாவட்டத்தில் நம்பிக்கையுடன் பயிரிடப்பட்ட சம்பா பயிர் கருகும் சூழல் எழுந்துள்ளது.
நதிகள் இணைப்பு:
இந் நிலையில், நதிகள் இணைப்பு குறித்து ஆராய்வது தொடர்பாக மத்திய அரசு நியமித்துள்ள குழுவின்நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை ஏப்ரல் 23ம் தேதிக்குள் சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று மத்தியஅரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications