ஜெ. மீதான ஸ்பிக் ஊழல்: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்க, சிறப்பு நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிதமிழக முன்னாள் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தமனுவுக்கு இரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், அரசுக்குச் சொந்தமான ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகள் அந்த நிறுவனத்துக்கே அடிமாட்டுவிலைக்கு விற்கப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.28 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பிரச்சனை எழுப்பினார்.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா, ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி மற்றும்தொழிலதிபர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னைசிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந் நிலையில் 2001ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இந்தவழக்கை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றம் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், வழக்கில் முக்கிய சாட்சிகளான 18 பேரிடம் குறுக்கு விசாரணை முடிந்து, வழக்கு இறுதிக் கட்டத்தைஅடைந்துள்ளது. இந் நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கில் தீர்ப்புவழங்க விதிக்கப்பட்டத் தடையை நீக்க வேண்டும்.
கடந்த 1996ம் ஆண்டு மே மாதம் நான் பணி ஓய்வு பெற்றேன். என் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால்,இதுவரை பென்ஷன், கிராஜூவிட்டி மற்றும் விடுப்பு கால சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே சிறப்புநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வழி செய்து, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பெஞ்ச், இது தொடர்பாக இரு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
தனது தடையை நீக்கவேண்டும் என்று மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனு நீதிபதி அகர்வால், நீதிபதி மாத்தூர்அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications