டிஸ்மிஸ் ஆன 999 அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை?
சென்னை:
வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆன 999 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மீண்டும் வேலை தரவும், மற்ற ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை வாபஸ் பெறவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு பொங்கல் தினத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். இதையடுத்து 1 லட்சம் அரசு ஊழியர்களை அரசு டிஸ்மிஸ் செய்தது. இந்தியாவையே உலுக்கிய இந்த டிஸ்மிஸ் நடவடிக்கையைடுத்து தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும் டிஸ்மிஸ் நடவடிக்கையை அரசு வாபஸ் பெறவில்லை.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அங்கும் அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தை அரசு ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் அணுகினர். அதில் 6072 பேர் தவிர மற்றவர்களை உடனடியாக வேலைக்கு சேர்க்குமாறும், 6072 பேருடைய வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை வைத்து விசாரிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத், நீதிபதி மலைசுப்ரமணியம், நீதிபதி தங்கவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் 999 பேர்தவிர மற்றவர்களுக்கு பதவி இறக்கம், ஊதிய உயர்வு ரத்து போன்ற ஓரிரு தண்டனைகளுடன் பணி வழங்கப்பட்டது. 999 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இருப்பினும் முதல்வர் பெரிய மனது வைத்து அனைத்துத் தண்டனைகளையும் ரத்து செய்து, 999 பேரையும் மீண்டும் வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்தி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். முதல்வர் ஜெயலலிதாவைத் தாங்கள் இன்னும் நம்பியிருப்பதாக அவர் நம்பிக்கையுடன் கூறி வந்தார்.
இந் நிலையில் 999 பேரையும் மீண்டும் பணியில் சேர்க்கவும், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்யவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்டத்துறை மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், 999 பேரையும் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினை இல்லை என்று அவர்கள் கூறி விட்டதாகவும் தெரிகிறது.
வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இதுதொடர்பான அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் அரசு அலுவலர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து டிஸ்மிஸ் ஆன ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுவாகி வரும் நேரத்தில் வேலையிழந்த அரசு ஊழியர்களை மீண்டும் வேலையில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications