12ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, நாகப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு மீனவர் பகுதிகளில் வருகிற 12ம்தேதி மிகப் பெரிய ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக, புதுவை மீனவர் கூட்டமைப்புஅறிவித்துள்ளது.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் செல்வதும்,படகுகள், மீன் வலைகளை சேதப்படுத்தும் செயலும் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால்ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் பகுதிமீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில் அடுத்த கட்டப் போராட்டம் 9ம் தேதி தொடங்குவதாக மீனவர்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் போஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மீனவர்கள், அரசு மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவற்றுக்கிடையேநடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.
இதையடுத்து எங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். வருகிற 9ம் தேதி தமிழகம்முழுவதிலும் உள்ள மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்குகிறார்கள்.
பின்னர் 12ம் தேதி ராமேஸ்வரம், நாகப்பட்டனம், அறந்தாங்கி, கோட்டைப்பட்டனம் உள்ளிட்ட அனைத்து மீனவர்பகுதிகளிலும் பிரம்மாண்டமான ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.
அன்றைய தினம், ராமேஸ்வரம் மீனவர்கள் குடும்பத்துடன் இலங்கைக்கு அகதிகளாக சென்று பஞ்சம் பிழைக்கும்போராட்டத்தையும் நடத்தவுள்ளனர் என்றார் போஸ்.












Click it and Unblock the Notifications