மதிமுகவினரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: நெடுமாறன் நாளை விடுதலை
சென்னை:
பொடா சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர்கள் 8 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னைஉயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, செவந்தியப்பன், இளவரசன், பூமிநாதன்,பொறுப்பாளர்கள் அழகுசுந்தரம், மணியன், கணேசன், நாகராசன் ஆகியோரை பொடா சட்டத்தின் கீழ் தமிழகஅரசு கைது செய்தது.
இவர்களில் வைகோ தவர்த்து ஏனைய 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு பெஞ்ச் அமைத்து ஜனவரி முதல் வாரத்தில்விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும் என்று மதிமுக வழக்கறிஞர்கள் தேவதாஸ், நன்மாறன் ஆகியோர்உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து மதிமுகவினர் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தினகரன், நீதிபதி நாகப்பன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தேதி குறிப்பிடாமல்தீர்ப்பைத் தள்ளிவைத்தனர்.
நெடுமாறன் நாளை விடுதலை:
இதற்கிடையே அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுவிட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்நாளை கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
வைகோவுடன் சந்திப்பு:
மதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில்உள்ள வைகோவை நேற்று மாலை சந்தித்துப் பேசினர். ஒரு மணிநேரம் நீடித்த இச் சந்திப்பிற்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய கண்ணப்பன்,
திமுக தலைவர் கருணாநிதியுடன் மதிமுக தலைமை நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து வைகோவிடம்தெரிவித்தோம். கடந்த 2ம் தேதி நடைபெறுவதாக இருந்த மதிமுக பொதுக்குழுக் கூட்டம்ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, எப்போது பொதுக்குழு கூட்டலாம் என்பது ஆலோசிக்கப்பட்டது என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications