மேட்டூர் அணை காலி: குடிநீருக்கு ஏங்கும் சேலம்!
சேலம்:
மேட்டூர் அணை காலியாகி வருவதால் காவிரி டெல்டா பகுதி மக்கள் மட்டுமல்லாது, சேலம் மாநகர மக்களும்பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக இருப்பது மேட்டூர் அணைதான். இங்கிருந்து வரும்தண்ணீர்தான் அவர்களது விவசாயத்திற்கு பேருதவியாக உள்ளது. தற்போது சம்பாப் பயிர்கள் அனைத்தும் கருகும்நிலையில் உள்ளன. சில வாரமாக திறந்து விடப்பட்ட மேட்டூர் அணை தற்போது மூடப்பட்டுவிட்டதால் விவசாயிகள் என்ன செய்வதுஎன்று தெரியாமல் அதிர்ந்து போய் உள்ளனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இணையான துயரத்தில்சேலம் மாநகர மக்களும் உள்ளனர்.
மேட்டூர் அணைதான் சேலம் மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையில்நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால் வரும் கோடை காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றுஅதிகாரிகளும் மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பகுதிக்கு தினசரி விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுவந்ததால், தற்போது அணையில் வெறும் 7.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
தண்ணீர் அளவு குறைவாக இருந்தாலும் கூட இதை வைத்து இன்னும் 3 மாதங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யமுடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
காவிரி வறண்டதால், டெல்டா மட்டுமல்லாது சேலம் மாநகரும் துவண்டு போயுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications