பாக். சிறுவனுக்கு "தமிழ் கண்"!
சென்னை:
பிறவியிலேயே பார்வையை இழந்த பாகிஸ்தான் நாட்டு சிறுவனுக்கு சென்னையைச் சேர்ந்த பெண்ணின் கண்பொருத்தப்பட்டு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்துத் தொடங்கிய பின்னர், பாகிஸ்தானைச்சேர்ந்த ஏராளமான பேர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர்.டெல்லிக்கும், மும்பைக்கும், பெங்களூருக்கும்தான் அதிக அளவில் அவர்கள் வருகிறார்கள்.
அந்த வரிசையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரைச் சேர்ந்த குர்ரம், கன்வல்ஷஜத் தம்பதிகளும் சென்னைக்குவந்தனர். அவர்களது ஒன்றரை வயது மகன் தல்ஹாவுக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. நெருங்கியஉறவுக்குள் திருமணம் செய்ததால் இந்தக் குறைபாடு ஏற்பட்டது.
மேலும், தல்ஹாவின் இடது கண்ணை விட வலது கண் மிகவும் சிறியதாக இருந்தது. இந்தக் குறைபாட்டைபாகிஸ்தானில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளினால் கூட சரி செய்ய முடியவில்லை.
இந் நிலையில் சென்னையில் நல்ல கண் மருத்துவமனைகள் இருப்பதாக குர்ரத்திற்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து குர்ரம், கன்வல் தம்பதிகள் சென்னைக்கு வந்தனர். இங்குள்ள அகர்வால் மருத்துவமனையில்அவர்கள் தங்களது மகனை அனுமதித்தனர்.
டாக்டர் அமர் அகர்வால் தலைமையிலான டாக்டர்கள் குழு சிறுவனை பரிசோதித்துப் பார்த்தபோது, மாற்றுக் கண்பொருத்தி குறைபாட்டை சரி செய்து விடலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து மாற்றுக் கண் கிடைக்கும் வரைமருத்துவனையில் தங்கியிருக்குமாறு குர்ரம் தம்பதிகளுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக விரைவிலேயே மாற்றுக் கண் கிடைத்தது. சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ்என்பவன் மனைவி மரகதம் மரணமடைந்ததால் அவரது கண்ணை தானமாக தருவதாக வெங்கடேஷ்மருத்துவமனையை அணுகிக் கூறினார்.
உடனடியாக மரகதத்தின் கண்கள் தானமாக பெறப்பட்டு அவற்றில் ஒரு கண்ணை தல்ஹாவுக்குப்பொருத்துவதற்காக கடந்த 23ம் தேதி அறுவைச் சிகிச்சை தொடங்கியது. சுமார் 4 மணி நேர அறுவைச்சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக தல்ஹாவின் வலது கண் குறைபாடு சரி செய்யப்பட்டது.
அடுத்த நாள் தல்ஹாவின் கண்களில் போடப்பட்டிருந்த கட்டுக்கள் அகற்றப்பட்டன. தல்ஹா முதல் முறையாகவெளிச்சத்தைப் பார்த்தான். அவனுக்கு திரும்பவும் பார்வை கிடைத்தது குர்ரம்-கன்வல் தம்பதிகளுக்கு ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது. அகர்வால் மருத்துவமனை டாக்டர்களுக்கு ஆயிரம் நன்றிகளைத் தெரிவித்தனர்அவர்கள்.
இந்த அறுவை சிகிச்சை குறித்தும், சென்னை வருகை குறித்தும் கன்வல் கூறுகையில், முதலில் சென்னைக்கு வரத்தயங்கினோம். ஆனால் இன்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். பாகிஸ்தானில் கூட இவ்வளவு பெரியசந்தோஷத்தை நாங்கள் அடைந்ததில்லை.
அரசியல் ரீதியாக இருநாடுகளும் எதிரிகளாக இருந்தாலும், இரு நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்தஅன்பையும், பாசத்தையும் வைத்துள்ளனர் என்பதை எங்களால் இங்கு புரிந்து கொள்ள முடிந்தது. எங்களதுமகனின் பார்வைக்காக இந்த மருத்துவமனையில் இருந்த ஒவ்வொருவரும் மிகுந்த அக்கறை காட்டியதையும்,பிரார்த்தனை செய்ததையும் எங்களால் மறக்கவே முடியாது. இந்த அன்பு எங்களை உருக வைத்துவிட்டது என்றார்கன்வல் கண்களில் நீர் மல்க.
சிகிச்சை முடிந்த பின்னர் மகன் தல்ஹாவுடன் குர்ரம் தம்பதிகள் வரும் வெள்ளிக்கிழமை விமானம் மூலம் டெல்லிசென்று அங்கிருந்து லாகூர் செல்கின்றனர். இந்திய கண் மூலம் பாகிஸ்தானைக் காணப் போகிறான் குட்டிப் பையன்தல்ஹா!
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications