மின் தடை 3 மணி நேரத்தில் சரியாகாவிட்டால் நஷ்ட ஈடு !!
சென்னை:
வீடுகள், நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ள மின் இணைப்பில் பழுது ஏற்பட்டு, அதை 3 மணி நேரத்தில்மின்வாரியம் சரி செய்யாவிட்டால், நுகர்வோருக்கு ரூ.50 முதல் ரூ.2,000 வரை நஷ்ட ஈடு கொடுக்க வகைசெய்யும் விதத்தில் விதிமுறை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய வரைவு விதிமுறைகளில் இந்த பரிந்துரைகூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மின்துறையை சீராக்க தேசிய மின்சார ஆணையம் அமைக்கப்பட்டது. அதே போல ஒவ்வொருமாநிலமும் இதே போன்ற ஆணையத்தை அமைத்துள்ளன. இந்த ஆணையங்கள் தான் இப்போது மின்கட்டணத்தை நிர்ணயித்து வருகின்றன.
வாக்குகளுக்காக மின் கட்டணத்தை அரசுகள் உயர்த்தாமல் இருந்து மின் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தநிலையில் இந்த ஆணையங்கள் அதிரடியாய் செயல்பட ஆரம்பித்துளளன. விவசாயிகளுக்கு இலவசமின்சாரத்தையும் இந்த ஆணையங்கள் ரத்து செய்துவிட்டன.
விவசாயிகளுக்கு அரசு இலவச மின்சாரம் தர விரும்பினால் அதற்கான கட்டணத்தை மின் வாரியத்துக்கு அரசுசெலுத்திவிட வேண்டும் என்ற வரைமுறை அமலுக்கு வந்துவிட்டது.
இதனால் பல மாநிலங்களிலும் மின் வாரியங்கள் நஷ்டத்தில் இருந்து மீள ஆரம்பித்துள்ளதோடு, புதிய மின்உற்பத்தித் திட்டங்களிலும் முதலீடு செய்யும் அளவுக்கு பலம் பெற ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் பணம் செலுத்தி மின்சாரத்தைப் பெறும் நுகர்வோரின் குறைகளைப் போக்கி, பொறுப்புணர்வுடன்மின் வாரியத்தை நடந்து கொள்ளச் செய்ய தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில பரிந்துரைகளைஅரசிடம் தந்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கட்டண கணக்கிட்டதில் தவறு இருப்பதாக வாடிக்கையாளர் புகார் செய்தால், கட்டணம் செலுத்தியாக வேண்டியஇறுதித் தேதிக்குள் அதை சரி செய்ய வேண்டும். இதை ஒரு காரணம் கூறி வாடிக்கையாளர் கட்டணம்செலுத்துவதை நிறுத்தி வைக்கக் கூடாது. பில் குறித்த புகாரை உரிய தேதியில் சரி செய்ய மின்வாரியம் தவறினால்வாடிக்கையாளருக்கு ரூ.150 நஷ்டஈடு தர வேண்டும்.
* மீட்டரில் பழுது இருப்பதாகத் தெரிய வந்தால், அதை சரிசெய்வதற்கான கட்டணத்தை வாங்கிக் கொண்டு 30நாள்களுக்குள் சரிசெய்து தர வேண்டும்.
* வாடிக்கையாளரின் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால், அதற்கான காரணத்தைப் பொறுத்து, நகரஙகளில் 3மணி நேரத்திற்குள்ளும், கிராமங்களில் 6 மணி நேரத்திற்குள்ளும் சரிசெய்ய வேண்டும். இதை செய்யத் தவறினால்ரூ.50 முதல் ரூ.2,000 வரை நஷ்டஈடு அளிக்க வேண்டும்.
* புதிய இணைப்பு, கூடுதல் திறன் கொண்ட இணைப்பு, தாற்காலிக இணைப்பு, மீட்டர் மாற்றுதல் உள்ளிட்டகோரிக்கைகளை உரிய தேதியில் நிறைவேற்றாவிட்டால் தினமும் ரூ.100 என்ற அடிப்படையில், ரூ.1,000க்குஅதிகமாகமல் நஷ்டஈடு தர வேண்டும்.
இவ்வாறு மக்களுக்கு சாதகமான பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதை அரசு அமலாக்கினால், சாதாரண பியூஸ் பிரச்சனைக்குக் கூட மின் வாரிய அலுவலகத்துக்கு காவடி எடுத்து,லைன் மேன்களில் கை, காலில் விழுந்து, லஞ்சம் கொடுத்து அழுது வரும் மக்களுக்கு பெரும் விடியலாக இருக்கும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications