மலேசியா: 8 தமிழர்களும் தூக்கு தண்டனையிலிருந்து தப்பினர்
சென்னை:
மலேசியாவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட 8 தமிழர்களும் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்வேலைக்காக சென்றிருந்தனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த இடத்தில் போதைப் பொருட்கள் இருந்ததாக கூறி 8பேரையும் மலேசியப் போலீஸார் கைது செய்தனர்.
மலேசிய நாட்டுச் சட்டப்படி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின.ஆனால் இத்தகவலை மலேசிய அமைச்சர்கள் மறுத்தனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குதான் போடப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் முடியவில்லை, மரணதண்டனையும் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் விளக்கினர்.
இந் நிலையில் 8 பேரையும் காப்பாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இதையடுத்து அந்த தமிழ் இளைஞர்களை மீட்கும் முயற்சிகளில் வெளியுறவுத்துறை இறங்கியது. மலேசியாவில்உள்ள இந்தியத் தூதரகம் அந்த இளைஞர்களுக்கு உதவியது. இந்த இளைஞர்களை கேட்பார் இல்லை என்றுகேவலமாக நடத்திய மலேசிய போலீசாரும் நீதிமன்றமும், இந்திய அரசின் தலையீட்டின்பேரில் தங்களதுநிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த்த தவறும் இல்லைஎன்று தெரிய வந்துள்ளதாக கோலாம்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நேற்று முன்தினம் இவர்களுக்கு விடுதலை கிடைத்தது. விரைவில் இவர்கள் தமிழகம் திரும்புகின்றனர்.
இவர்களை மீட்க உதவிய முதல்வர் ஜெயலலிதா, வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர்நிச்சயம் பெரும் பாராட்டுக்குரியவர்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications