சிறையிலிருந்து பழ.நெடுமாறன் விடுதலை
கடலூர்:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் இன்று கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறை வாசலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நெடுமாறனை கட்டித் தழுவி வரவேற்றனர்.
அதன் பின்னர் கடலூர் நகரில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு நெடுமாறன் மாலை அணிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சென்ற பின் திமுக தலைவர் கருணாநிதி, பாமக தலைவர்டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டவர்களை சந்திப்பேன் என்றார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்தாக 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பொடாவில் கைது செய்யப்பட்டார்நெடுமாறன்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில்ஜாமீன் கிடைத்தது. ஆனால், 1993ம் ஆண்டில் காவியத் தலைவன் கிட்டு என்ற புலி ஆதரவு புத்தகத்தைவெளியிட்டதற்காக இவர் மீது போடப்பட்ட வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அதில் ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்த மனு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், நீதிபதியை தமிழகஅரசு திடீரென மாற்றியதால் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். அங்கு ஜாமீன்மறுக்கப்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ராஜன் நேற்றுமுன்தினம் (6ம் தேதி) நெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கினார்.
ஆனாலும், நீதிமன்ற- சிறைத்துறை பார்மாலிட்டிகளைக் காட்டி நெடுமாறனை உடனடியாக விடுவிக்காமல்இழுத்தடித்த தமிழக அரசு இன்று காலை வேறு வழியின்றி அவரை கடலூர் சிறையில் இருந்து விடுவித்தது.
இருதய நோயாளியான நெடுமாறனை இந்த சிறை வாசம் மிகவும் தொல்லைப்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.சிறை உணவினால் வயிற்றுக் கோளாராலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் பல உடல் உபாதைகளால்சிரமப்பட்டு வந்தார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications