இறங்கி வந்தார் ராமதாஸ்: திமுக அணியில் சேருகிறது பா.ம.க

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கண்டு கொள்ளாமல் விட்டதால், வேறு வழியின்றி தனது நிலையிலிருந்து இறங்கி வந்து திமுக அணியில்சேர முன் வந்துள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

வரும் 12ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாத வாக்கில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலை ஒன்றாகசந்தித்த திமுகவும், பா.ஜகவும் இம் முறை எதிரெதிராக நிற்கின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் இடம் பெறுகின்றன. இந்தக் கூட்டணியில் சேருவது குறித்துமுடிவை அறிவிக்காமல் இருந்தது பாட்டாளி மக்கள் கட்சி.

எங்களுக்கு 10 சீட்கள் தரும் கூட்டணியில்தான் இடம் பெறுவோம் என்று ராமதாஸ் கூறினார். இதை அதிமுகமற்றும் திமுக ஆகியவை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்தச் செய்தியை மறுத்துப் பார்த்தார்.

இருந்தாலும் கூட்டணி தொடர்பாக அதிமுக தரப்பில் இருந்து ராமதாஸை யாரும் அணுகவில்லை.

தனது கணக்கு தப்புக்கணக்கானதை உணர்ந்து கொண்டார் ராமதாஸ், அவர் அதிகம் எதிர்பார்த்தது,அதிமுகவிலிருந்து அழைப்பு வரும் என்றுதான். ஆனால் முதல்வர் ஜெயலலிதா அவரைக் கண்டு கொள்ளவேஇல்லை.

அவரை மட்டுமின்றி அதிமுகவுடன் கூட்டணிக்கு அலையும் பா.ஜ.கவையும் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த பாமக, இன்னும் பா.ஜ.கவுடன் இருந்தால் நிலைமை படு மோசமாக விடும் என்றுஉணர்ந்து கொண்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பான திமுக அணியில் இணைந்து விடுவதே நல்லது என்றுராமதாஸ் முடிவெடுத்துவிட்டார் என அக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கூட்டணி, தேர்தல் முடிந்தவுடன் இன்னொரு கூட்டணி என்று கூடு விட்டு கூடுபாய்ந்து வித்தை காட்டிக் கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அவப் பெயர் ஏற்படும், நமதுஜாதியினடையே கூட அதிருப்தி ஏற்பட்டு விடும் என்று தர்மபுரி எம்.பியும் கட்சியின் முன்னணி நிர்வாகியுமானபு.த.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பகிரங்கமாகவே ராமதாசிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதையடுத்து திமுகவுடன் இணைந்து விடுவது என்ற முடிவை ராமதாஸ் எடுத்துவிட்டார் என்கின்றனர்.

வரும் 12ம் தேதி சென்னையில் பாமகவின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அக் கூட்டத்தில்இதற்கான அறிவிப்பை ராமதாஸ் அறிவிக்கக் கூடும்.

திமுக அணியில் இணைவது குறித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்தும் அன்றுஅதிகாரப்பூர்வமாக பா.ம.க. அறிவிக்கும்.

இந்தத் தகவல்களை அறிந்து அறிவாலய வட்டாரம் மகிழ்ச்சியில் இருந்தாலும், 12ம் தேதிக்குள் அதிமுக இடையில்புகுந்து ஏதாவது குளறுபடி செய்துவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+