கூட்டணியில் அதிமுகவை இழுக்க பா.ஜ.க. தீவிரம்
டெல்லி:
மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சேர வாய்ப்புள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆரம்ப கட்ட பேச்சு நடத்த பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுசென்னை வருவார் என்றும் தெரிகிறது.
நேற்று பிரதமர் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் அதிமுகவுடனானஉறவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது அதிமுகவுடன் பேச்சு நடத்தலாம் என அத்வானி தரப்பினர்சொன்னதை வாஜ்பாய் ஏற்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாயுடுவை ஜெயலலிதாவிடம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 11, 12ம் தேதிகளில்ஹைதராபாத்தில் நடக்கும் பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவை கூட்டணிக்கு வரச் சொல்லி கோரிக்கைவைக்கப்படும். இதன் பின்னர் ஜெயலலிதாவை நாயுடு சந்திப்பார்
இந் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெர்னாண்டஸ்,
அதிமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க இதுவரை எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுக்கவில்லை.ஆனால், வருங்காலத்தில் அதுபோன்ற கூட்டணி ஏற்படாது என்று கூறுவதிற்கில்லை என்றார்.
இப்போது பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் 4 எம்.பிக்கள் உள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 7 இடங்கள் வரைகேட்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications