தமிழக-கேரள நீர் பங்கீடு ஒப்பந்தம்: விளக்கம் கேட்கிறது திமுக
சென்னை:
பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழக, கேரள மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்துதமிழக அரசு விளக்க வேண்டும் என முன்னாள் திமுக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப் பங்கீடு தொடர்பறீணீ இரு மாநிலஅரசுகளுக்கும் இடையே சமீபத்தில் திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடந்தது. இதைத் தொடர்ந்து உடன்பாடுஎட்டப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முழு விவரத்தையும் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஜெயலலிதா அரசின் கடமையாகும்.இரு தரப்பு பேச்சுவார்த்தையின் முழு விவரங்களையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.
பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப்பாசன விவசாயிகள் இந்த பேச்சுவார்த்தை குறித்தும், உடன்பாடு குறித்தும் அறிந்து கொள்ளும் முழுஉரிமை படைத்தவர்கள் ஆவர் என்று கூறியுள்ளார் அவர்.
திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications