கருணாநிதியுடன் நெடுமாறன் சந்திப்பு: திமுக கொடியை உயர்த்திப் பிடித்தார்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு ஆகியோரை இன்றுசந்தித்துப் பேசினார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியது, விடுதலைப் புலிகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டது தொடர்பானவழக்குகளில் பொடா சட்டத்தில் கைதாகியிருந்த நெடுமாறன் ஜாமீனில் நேற்று விடுதலை ஆனார்.
அவரை சிறை வாசலில் திமுகவினர் பெருமளவில் திரண்டு வரவேற்றனர்.
இந் நிலையில் இன்று காலை அவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றார். அவருடன் தமிழர் தேசியஇயக்க பொதுச் செயலாளர் திருச்சி செளந்தரராஜன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோரும் சென்றனர்.
கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி தனக்காக குரல் கொடுத்தமைக்காகவும் மத்திய அரசிடம் போராடியதற்கும்நன்றி தெரிவிததார் நெடுமாறன். நெடுமாறனிடம் உடல் நிலையை விசாரித்த கருணாநிதி அவருத்து தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி செய்தியாளர்களுக்கு நெடுமாறன் பேட்டி கொடுக்கவில்லை.
இதனால் அவரிடம் திமுக கொடியைக் கொடுத்த கருணாநிதி, அதை உயர்த்திப் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்தப நெடுமாறனும் புன்னகைத்தாவாறே திமுக கொடியைப் பிடித்தார்.
அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவை அக் கட்சியின் அலுவலகத்தில்சென்று சந்தித்து தனது விடுதலைக்காக நெடுமாறன் நன்றி தெரிவித்தார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications