மலேசியா: 8 தமிழ் இளைஞர்களும் சென்னை திரும்பினர்
சென்னை:
மலேசிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 தமிழர்களும் இன்று சென்னை திரும்பினர்.
ராமாநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 8 இளைஞர்கள் கோலாலம்பூரில் வேலை பார்க்கச் சென்றனர்.ஆனால் அங்கு அவர்கள் தங்கியிருந்த விடுதியை போலீஸார் சோதனை செய்து, 8 பேரையும் கைது செய்தனர்.போதைப் பொருள் வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகள் பரவியதால் தமிழகத்தில் பரபரப்புநிலவியது. பல்வேறு சமூக நல அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் பிரதமர், மத்திய வெளியுறவுஅமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு கடிதங்கள், தந்திகளை அனுப்பி 8 பேரையும் காப்பாற்றுமாறுகோரிக்கை விடுத்தன.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு கடிதம் எழுதி, 8 பேரையும்மீட்க கோரினார். முதல்வரின் வேண்டுகோளையடுத்து யஷ்வந்த் சின்ஹாவும் உடனடி நடவடிக்கைஎடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த புதன்கிழமை காலை 8 பேரையும் கோலாலம்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.விடுவிக்கப்பட்ட 8 பேரும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும்உடனடியாக இந்தியா திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
இதையடுத்து சரவணன் என்பவரைத் தவிர மற்றவர்கள் விமான பயணத்திற்கான நிதியைத் திரட்டி டிக்கெட் வாங்கிவிட்டனர். ஆனால் சரவணனிடம் அந்தளவுக்குப் பணம் இல்லாததால் அவரால் டிக்கெட் வாங்க முடியவில்லை. இத்தகவல், திண்டுக்கல்லில் உள்ள பீஸ் என்ற சமுக நல அமைப்பின் தலைவர் பால்பாஸ்கருக்கு (இவர்தான் 8தமிழர்களையும் மீட்க முழு முயற்சிகள் எடுத்தவர்) தெரிவிக்கப்பட்டது.
பால்பாஸ்கர் உடனடியாக பினாங்கு மனித உரிமைக் கழக தலைவர் முகம்மது இத்ரிஸ் என்பவரை தொடர்புகொண்டு சரவணனுக்கு உதவுமாறு கோரினார். இத்ரிஸும், சரவணனின் பயணத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு அவரது பயணத்திற்கு ஏற்பாடு செய்தார்.
சென்னை வந்த 8 பேரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். சென்னைக்குவந்ததும் நாளை ஜெயலலிதாவை சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications