மலேசியாவிலிருந்து சக்கர நாற்காலியில்....
சென்னை:
இதற்கிடையே மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சிறையில் அடைக்கப்பட்டு, தூக்குத் தண்டனை அபாயத்திலிருந்து தப்பிய 8தமிழர்கள் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருச்செல்வம், வரதராஜன், சரவணன் உள்ளிட்ட 8 இளைஞர்கள் மலேசியத் தலைநகர்கோலாலம்பூருக்கு வேலைக்காக சென்றனர். ஆனால் இவர்கள் ஹெராயின் பதுக்கி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டுவழக்கு தொடரப்பட்டது.
மலேசிய நாட்டுச் சட்டப்படி போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை என்பதால் இவர்கள் 8 பேருக்கும் மரண தண்டனைவிதிக்கப்படும் என்ற பீதி எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு மத்திய அரசை தட்டி எழுப்பி 8 பேரையும்மீட்டார்.
இதையடுத்து 8 பேரையும் கோலாலம்பூர் நீதிமன்றம் விடுவித்தது. நேற்றிரவு இவர்கள் விமானம் மூலம் சென்னை வந்துசேர்ந்தனர்.
இவர்களில் வரதராஜன் என்பவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கால்களில் வீக்கம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில்வைத்து தான் இவர் கொண்டு வரப்பட்டார். வேலைக்காக அந்த ஊருக்குப் போய் சிறையில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டதில்அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் சிறையில் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், விலங்குகள் போல தாங்கள் நடத்தப்பட்டதாகவும் 8 பேரும்கண்ணீருடன் தெரிவித்தனர்.
பின்னர் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை மீட்க ஜெயலலிதா மூலம் பெரும் முயற்சி எடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த சமூக நல அமைப்பின் தலைவரான பால்பாஸ்கர் விமான நிலையத்திற்கு வந்திருந்து இவர்களை வரவேற்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications