சிங்கப்பூர் சவுக்கடியில் இருந்து தப்பி வந்த 13 தஞ்சை தமிழர்கள்
சென்னை:
கட்டுமான வேலைக்காக சிங்கப்பூர் சென்று விசா காலம் முடிவடைந்த பிறகும் அங்கு தங்கியிருந்த குற்றத்திற்காக சிங்கப்பூர்காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட 13 தஞ்சாவூர் இளைஞர்கள் நேற்றுசென்னை வந்து சேர்ந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலையன் உள்ளிட்ட 13 இளைஞர்கள் கட்டுமான வேலைக்காக சிங்கப்பூர் சென்றனர். அங்குஓரளவு சம்பாதித்த அவர்கள், விசா காலம் முடிவடைந்த பிறகும் தங்கினர்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் விவசாய வேலை ஏதும் இல்லாத நிலையில், தஞ்சைக்குத் திரும்பி மீண்டும் சாப்பாட்டுக்குக்கஷ்டப்படுவதை விட முடிந்தவரை சம்பாதித்து விட்டுச் செல்வோமே எனறு நினைத்தது தொடர்ந்து அங்கேயே தங்கியது தான்அவர்கள் செய்த மிகப் பெரிய தவறானது.
விசா காலம் முடிந்த பிறகும் தங்கிய குற்றத்திற்காக 13 பேரையும் சிங்கப்பூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அங்கு அவர்கள் பட்ட கஷ்டம் சொல்லி மாள முடியாது.
அதை பாலையனே கூறுகிறார், தினசரி புழு நெளியும் சாப்பாடுதான் கொடுப்பார்கள். தினசரி பிரம்பால் அடிப்பார்கள். தண்ணீர்கேட்டு கதறினாலும் கொடுக்க மாட்டார்கள். நாய்களை விடவும் கேவலமாக நடத்தினார்கள்.
அரை நிர்வாண கோலத்தில்தான் எங்களை வைத்திருப்பார்கள். தலையை மொட்டை அடித்து விட்டார்கள். எங்களதுசூட்கேஸ்களை உடைத்து விட்டார்கள்.
இப்போது எப்படியோ சென்னை வந்துவிட்டோம். ஆனால், தஞ்சாவூருக்கு போகக் கூட இப்போது எங்களிடம் பணம் இல்லை.இன்னும் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிங்கப்பூர் சிறையில் துன்பப்பட்டு வருகிறார்கள்.
அவர்களை மீட்க தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கப்பூரில் பல சீனர்களும் விசா காலம் முடிந்த பிறகு தங்குகிறார்கள். அவர்களை எதுவும் செய்யாமல் திருப்பிஅனுப்புகிறார்கள். ஆனால் இந்தியர்களைத்தான் மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.
இந்தியத் தூதரகம் எங்களுக்கு எந்த உதவியையும் செய்ய மறுத்து விட்டது என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications