தேர்தல் கூட்டணி: கருணாநிதிக்கு வி.பி.சிங் வாழ்த்து
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப் பெரும் மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க முயற்சிமேற்கொண்டுள்ளதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கியதால் ஆட்சியை இழந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங், திமுக தலைவர்கருணாநிதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது பாராட்டைத் தெரிவித்தார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக திமுக அமைத்துள்ள மதச்சார்பற்ற கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று நிச்சயமாக தான்நம்புவதாகவும் கருணாநிதியிடம், அவர் தெரிவித்தார் என திமுக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பலம் இழந்தது பா.ஜ.க என்கிறது கம்யூனிஸ்ட்
இந் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில இருந்து திமுக, மதிமுக விலகியதால் பாரதீய ஜனதா பலவீனமாகி விட்டது என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு செயலாளர் சங்கரய்யா கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெரியான் கொள்கைக்கு முரணாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்ததிமுகவும், மதிமுகவும் விலகி விட்டது வரவேற்புக்குரியது. இந்த இரு கட்சிகளும் விலகி விட்டதால் பலம் குறைந்து போனபா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவே இப்போது பயந்து போய் உள்ளது.
இந்த பயம் காரணமாகத்தான் பல்வேறு சலுகைகளை அறிவித்து மினி பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார்கள். அது கூட மத்தியவர்க்க வாக்காளர்களை கவரத்தான். வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள் ஆகியோரைஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டது பா.ஜ.க.
தமிழகத்தில் பா.ஜ.க, அதிமுக அல்லாத கூட்டணியில் நாங்கள் இடம் பெறுவோம். எத்தனை சீட் ஒதுக்கப்பட்டாலும்கவலையில்லை. பாமகவும் பா.ஜ.கவிடம் இருந்து விலகி வர வேண்டும் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications