நாகர்கோவில்: ஜீனாகுமரி மீது 3-வது முறையாக ஆசிட் வீச்சு!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடத்தைச் சேர்ந்த ஜீனாகுமாரி மீது 3வது முறையாக அமிலம் வீசப்பட்டுள்ளது.முகத்தில் காயத்துடன் அந்தப் பெண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் ஜீனாகுமாரி. இவர் வடக்குன்குளம் என்ற இடத்தில் உள்ளமருத்துவக் கல்லூரியில் டி.பார்ம் (மருந்தாளுனர் பட்டயப் படிப்பு) படித்து வந்தார். அப்போது ஜோன்ஸ்என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் ஜோன்ஸின் நடவடிக்கை பிடிக்காததால் காதலை முறித்துக் கொண்டார்ஜீனாகுமாரி.
இதனால் ஆத்திரமடைந்த ஜோன்ஸ், ஜீனாகுமாரி மீது கடந்த ஆண்டு 2 முறை அமிலம் வீசினார். இதில்காயமடைந்த ஜீனாகுமாரி சிகிச்சைக்குப் பிறகு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு இடமாறுதல் கோரி சென்றார்.
அங்கு சென்ற பிறகும் ஜோன்ஸ் விடவில்லை. ஜோன்ஸின் நண்பர்கள் சிலர், ஜீனாகுமாரியை ஏமாற்றிப் பேசிபெங்களூருக்குக் கடத்திச் சென்றனர்.
அங்கு வைத்து, ஜோன்ஸ் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு ஜீனாகுமாரியை மிரட்டியுள்ளனர். பின்னர் அவரைசென்னையில் விட்டு விட்டனர். அதன் பிறகு படிப்பை கைவிட்டுவிட்டு வெள்ளமடத்திற்கேத் திரும்பினார்ஜீனாகுமாரி.
இந் நிலையில் தனது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் மகள் சந்தியாவுடன் (வயது 8) பேசிக்கொண்டிருந்தார் ஜீனாகுமாரி. அப்போது ஜோன்ஸின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து ஜீனாகுமாரி மீது அமிலத்தைவீசி விட்டு தப்பினர்.
அதில் ஜீனாகுமாரியின் முகத்தின் இடதுபுறம், கை ஆகியவை காயமானது. சந்தியாவின் முகத்திலும் காயம்ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் திருநெல்வேலி அரசுமருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரே பெண்ணின் மீது தொடர்ந்து 3வது முறையாக அமில வீச்சு நடந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications