பா.ஜ.க. செயற்குழு இன்று கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

பாரதீய ஜனதாக் கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது.மக்களவைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்துவது முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படுகிறது.

இதில் பிரதமர் வாஜ்பாயி, துணைப்பிரதமர் அத்வானி, கட்சித் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பொதுச் செயலாளர்பிரமோத் மகாஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பான அறிவிப்பை, செயற்குழுக் கூட்டத்தையடுத்துநடைபெறும் பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக் கூட்டத்திற்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை வகிக்கிறார்.

இந் நிலையில் பிரமோத் மகாஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

மக்களவைக் கலைப்பு மற்றும் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வரும் பொங்கல் திருநாளில் வெளியிடுப்படும். மார்ச்இறுதியில் மக்களவைத் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

மக்களவை கலைக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி தொடக்கத்திலோ மக்களவை கலைக்கப்பட்டால், பிப்ரவரி மத்தியில்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு. மார்ச் இறுதியில் தேர்தல் நடத்த முடியும். இருந்தபோதிலும் தேர்தல்ஆணையத்துக்கு கட்சி நெருக்கடி தராது.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது, தென்மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பது மற்றும் தேசியஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை குறித்து செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+