குப்பை அள்ளும் பேரூராட்சித் தலைவரும், கவுன்சிலர்களும்!
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளும் பணிக்கு துப்புறவுத்தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பேரூராட்சித் தலைவரும், கவுன்சிலர்களும் குப்பை அள்ளும் பணியைமேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலம் செஞ்சி. இங்குள்ள கோட்டை மிகவும் பிரசித்தி பெற்றது.வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செஞ்சி, பேரூராட்சி அந்தஸ்து பெற்ற சிறு நகரம்.
இங்கு துப்புறவுத் தொழிலாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு இல்லாத காரணத்தாலும், சரியானமுறையில் ஊதியம் கொடுக்கப்படாததாலும் யாரும் இப் பணிக்கு வருவதில்லை.
பேரூராட்சிக்கு அரசு கொடுக்க வேண்டிய நிதியை சரியாக கொடுக்காததாலும், நிதியை உயர்த்த அரசு மறுத்துவருவதாலும் நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது செஞ்சி பேரூராட்சி.
இந் நிலையில் துப்புறவு வாரம் அனுசரிக்குமாறு செஞ்சி பேரூராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால்வெறும் 13 துப்புறவுத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி துப்புறவு வாரத்தை அனுசரிப்பதுஎன்று பேரூராட்சித் தலைவர் மஸ்தானும், கவுன்சிலர்களும் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து தாங்களும் களம் இறங்கி துப்புறவுப் பணியில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்த்து கூடுதல்நிதியைக் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைவர் மஸ்தானும், கவுன்சிலர்களும் கையில்துடைப்பத்துடன் செஞ்சி நகரில் வலம் வந்து கொண்டுள்ளனர்.பேரூராட்சித் தலைவரே துப்புறவுப் பணியில் ஈடுபட்டுள்ளது செஞ்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications