17 வயது பெண்ணை திருமணம் செய்த 54 வயது அரசு ஊழியர் கைது!
சென்னை:
17 வயது பெண்ணை காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்று கட்டாய திருமணம் செய்த 54 வயது மத்திய அரசுஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமணி. 54 வயதாகும் இவர் மத்திய அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சாந்தா மூலம் 4 மகன்கள் உள்ளனர்.இவர்களில் 3 பேருக்கு கல்யாணமாகி அவர்கள் மூலம் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
இரண்டாவது மனைவி சாரதாவுக்கு ஏற்கனவே அவரது முதல் கணவர் மூலம் 4 குழந்தைகள் உள்ளனர். அழகுமணிஇரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதால் முதல் மனைவி சாந்தா தனது குழந்தைகளுடன் ஓட்டேரிக்குச்சென்று தனியாக வசித்து வந்தார்.
இந் நிலையில் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாக்கியலட்சுமி என்ற 17 வயது பெண்ணிடம் நட்பைஏற்படுத்திக் கொண்ட அழகுமணி அவரிடம் திருமண ஆசை காட்டி பழக ஆரம்பித்தார். இந் நிலையில் கடந்த 5ம்தேதி பாக்கியலட்சுமியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்திற்குச் சென்றார்.அங்கு லாட்ஜில் வைத்து அவருக்குதாலி கட்டியுள்ளார். பின்னர் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று பயந்த அழகுமணி, பாக்கியலட்சுமியுடன்தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தற்கொலை முடிவை போன் மூலம் பாக்கியலட்சுமியின் வீட்டிற்குத்தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் விஷம் அருந்தியுள்ளனர்.
பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக அயனாவரம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில்போலீஸார் உடனடியாக காஞ்சிபுரம் விரைந்து சென்று பார்த்தபோது, இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததுதெரியவந்தது.
உடனடியாக இருவரும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் ஆபத்துநிலையில் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அழகுமணியை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications