சென்னைக்கு தண்ணீர் கொடுக்க மதுராந்தகம் மக்கள் எதிர்ப்பு!
மதுராந்தகம்:
குடிநீர்ப் பஞ்சத்தால் பாலைவனமாகி வரும் சென்னை நகருக்கு மதுராந்தகம் ஏரியிருந்து தண்ணீர் எடுக்கமதுராந்தகம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை நகர குடிநீர் பிரச்சினை இன்னும் ஓரிரு மாதங்களில் விஸ்வரூபம் எடுக்கவுள்ளது. தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவ மழை என முக்கியமான மழைக் காலங்கள் முடிந்து போய் விட்டதாலும், இந்த இருபருவங்களிலும் போதிய மழை பொழியாததாலும், வரும் கோடை காலத்தில் சென்னையில் கடும் குடிநீர்ப் பஞ்சம்ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதே நகரின் பல்வேறு பகுதிகளில் சரியான குடிநீர் விநியோகம் இல்லை. மக்கள் குடங்களுடன்தெருக்களில் அலைந்து கொண்டுள்ளார்கள்.இந் நிலையில் கோடை காலத்தில் ஏற்படப் போகும் பிரச்சினையைஎப்படி சமாளிக்கலாம் என்று அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. அதன் விளைவாக எடுக்கப்பட்டுள்ள சிலமுடிவுகளில் ஒன்றுதான் மதுராந்தகம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுப்பது என்ற முடிவு.
சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மதுராந்தகம். இங்குள்ள ஏரி 2,643 ஏக்கர் பரப்பளவுகொண்டது. மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களின் விவசாய தேவையை இந்த ஏரி தண்ணீர்தான்நிறைவேற்றுகிறது. மொத்தம் 25,000 ஏக்கர் பாசன நிலங்கள் இந்த ஏரியை நம்பியுள்ளன.
ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏற்கனவே ஏரியின் பரப்பளவு 2000 ஏக்கராக சுருங்கிவிட்டது. மேலும் ஏரி தூர்வாரப்படாமல் ஏரியின் ஆழம் குறைவாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கணக்குப்படி ஏரியில் 450மில்லியன் கேலன் தண்ணீர் தேக்கப்படலாம். ஆனால் 200 மில்லியன் கேலன் தண்ணீர்தான் இருப்பு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால், மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள பாசன நிலங்கள்அனைத்தும் பாதிக்கப்படும் என்று மதுராந்தகம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மேலும், கடந்த ஆண்டில் ஏற்பட்ட கடும் நஷ்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டு கொஞ்சம் சுமாரான அளவுக்குவிவசாயப் பணிகள் நடந்து வருவதாகவும், இந் நிலையில் தண்ணீர் எடுக்க அனுமதித்தால் அது தற்கொலைமுடிவாகவே அமையும் என்பதால் சென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம் என்றும் மதுராந்தகம் பகுதி விவசாயிகள்கூறுகிறார்கள்.
இதற்கிடையே, மதுராந்தகம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி மதுராந்தகம் நகராட்சிகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தவும்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மதுராந்தகம் நகராட்சித் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா நீரும் இல்லாமல், மழையும் பெய்யாமல் சென்னை நகரம் வறண்டு போயுள்ள நிலையில் மதுராந்தகம்எதிர்ப்பு தெரிவிப்பதால் வரும் கோடை காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறார்களோ சென்னை மக்கள்?
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications