8 மதிமுகவினரும் ஜாமீனில் விடுதலை: வைகோ இன்று ஜாமீன் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வைகோவுடன் சேர்ந்து பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட 8 மதிமுக நிர்வாகிகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பொட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி 2002ம் ஆண்டு ஜூலைமாதம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். அவருடன் கட்சியின் நிர்வாகிகளான கணேசன், அழகுசுந்தரம், வீர இளவரசன், கணேசமூர்த்தி, பூமிநாதன், மணியம், புலவர் செவந்தியப்பன், நாகராஜன் ஆகியோரும் பொடாசட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் வைகோ தவிர மற்ற 8 பேரும் ஜாமீன் கோரி பொடா நீதிமன்றத்தில் மனு செய்தனர். அங்கு அவர்களது ஜாமீன் மனுநிராகரிக்கப்பட்டது. இதையடுத்து 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்களை கடந்தவெள்ளிக்கிழமையே விசாரித்து முடித்த நீதிபதி தினகரன், நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந் நிலையில் இன்று இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எட்டு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகநீதிபதிகள் அறிவித்தனர்.

அதன்படி, பத்திரிக்கைகளுக்கு பேட்டி, அறிக்கைகள் கொடுக்கக் கூடாது. விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவுஅமைப்புகள் குறித்து பேசக் கூடாது. விசாரணையின்போது தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டுகளைபொடா நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது.சாட்சிகளைக் கலைக்க முயலக் கூடாது. வீட்டு முகவரியை போலீசாரிடம் தர வேண்டும், தேவையிலலாமல் வீட்டை மாற்றக்கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இவர்கள் மீதான வழக்கை ஜூன் மாதத்திற்குள் முடித்து தீர்ப்பு வழங்குமாறு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்கும்நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக இவர்களை ஜாமீனில் விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்ற அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தைநீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

நீதிபதிகள் கூறுகையில், இந்த 8 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் சாட்சிகளின் விவரத்தையும்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துவிட்டது. இந் நிலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் வரைஇவர்களை ஜாமீனில் விடவே கூடாது என்று கூறுவது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் தரப்பட்டுள்ள தனி மனிதஉரிமைக்கு எதிரானது என்றனர்.

அதே நேரத்தில், ஜாமீன் மனுவை நிராகரிக்கும்போது, வெறும் யூகங்களின் அடிப்படையிலான வாதத்தை மட்டும் மனதில்கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது என்று பூந்தமலில் நீதிமன்றத்துக்கும் நீதிபதிகள் அறிவுரை கூறினர்.

மேலும் பொடா மறு ஆய்வுக் குழுவிடம் தங்களது கைதை எதிர்த்து மனு செய்துள்ளதால், இவர்களுக்கு ஜாமீன் தரக் கூடாது என்றஅரசின் வாதமும் தவறானது.

இவர்கள் மீது வேறு வழக்குகள் ஏதும் இல்லாததால், நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் வேலூர் சிறையிலிருந்து அனைவரும்இன்று அல்லது நாளை காலை விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோ இன்று ஜாமீன் மனு:

இதைத் தொடர்ந்து வைகோவும் இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார்.

இதற்கிடையே பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைகோவை லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானராம் விலாஸ் பாஸ்வான் சந்தித்துப் பேசினார். இருவரையும் சந்திக்க விடாமல் போலீசார் தடுத்தபோது மதிமுக தொண்டர்கள்,பாஸ்வான் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் இறங்கி வந்து சந்திப்புக்கு அனுமதி தந்தனர்.

நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பாஸ்வான் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய திமுகவுடன்இணைந்து போராடத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், ராஜிவ் கொலையில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக இப்போதுபேசும் வாஜ்பாய், அந்த கட்சியின் ஆதரவோடு ஏன் அரசாங்கம் நடத்தினார் என்று கேட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+