சிறையில் வைகோவை இன்று சந்திக்கிறார் பாஸ்வான்
சென்னை:
லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் இன்று வேலூர்மத்திய சிறை சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்கவுள்ளார்.
சென்னை வந்த அவர் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். கருணாநிதியின் இல்லத்தில் நடந்தசந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பாஸ்வான் பேசுகையில், மக்கள் மீதும், கடந்த 4 ஆண்டுகளில் நடத்தியதனது ஆட்சியின் மீதும் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை. இதனால்தான் மினி பட்ஜெட்டை அறிவித்து மக்களைஏமாற்றப் பார்க்கின்றனர்.
சமீபத்தில் நடந்த வட மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியுடன்இருந்ததால் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததாக பா.ஜ.க. விமர்சனம் செய்தது. அதே அதிருப்தி அலையால்நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் வீழ்த்துவார்கள்.
பொதுத்துறைகளை தனியாருக்கு விற்றதன் மூலம் தேசிய ஜனநாயக அரசு ரூ. 35,000 கோடி பணத்தைமிச்சப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பணம் எங்கே போனது? எதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதுஎன்பது தெரியவில்லை என்றார் பாஸ்வான்.
பாஸ்வான், காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் இணையப் போவதாக ஏற்கனவேதெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இன்று வேலூர் மத்தியசிறைக்குச் சென்று வைகோவையும் பாஸ்வான் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications