டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!
சென்னை:
ஆட்குறைப்புக்கு தமிழக அரசு உத்தேசித்துள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய(டி.என்.பி.எஸ்.சி.) ஊழியர்களில் 90 சதவீதம் பேரின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. .
தமிழக அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடப்பது வழக்கம். ஆனால் ஜெயலலிதாமுதல்வர் பதவிக்கு வந்த பிறகு அரசுப் பணிகளுக்கு ஆளெடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த இரண்டரைஆண்டுகளாக அரசுப் பணிகளுக்கு யாரும் எடுக்கப்படவில்லை.
ஆசிரியர்கள், காவலர்கள் உள்ளிட்ட ஒரு சில பணிகளுக்கு மட்டுமே ஆளெடுப்பு நடந்து வருகிறது. இந் நிலையில்கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு வேலையும் இல்லாமல் உள்ள டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களைக் குறைக்கதமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதன்படி தற்போதுள்ள ஊழியர்களில் 90 சதவீதம் பேரை பணியிறக்கம் செய்யவும், காலியாகவுள்ள வேறுதுறைகளுக்கு மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்பிய பிறகும் ஊழியர்கள்இருந்தால் அவர்களை வேலையை விட்டு அனுப்பவும் அரசு முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இந்த செய்தியால் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா அரசுபதவியேற்றது முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. வேலைநிறுத்தம்செய்த அரசு ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். சமீபத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைதமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.
இந் நிலையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களின் வேலைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில்பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை கோரி பதிவு செய்துவைத்துள்ளனர். ஆனால் தமிழக அரசு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருந்தும்வேலைக்கு ஆளெடுப்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் டி.என்.பி.எஸ்.சி. அமைப்பையே செயலிழக்க வைக்கும் வகையில் ஆட்குறைப்புக்கு அரசு முடிவுசெய்துள்ளது வேலையில்லாத இளைஞர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications