மதுரை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: ஊழியர் காயம்
மதுரை:
போலீசாரால் கைப்பற்றப்பட்டு, மதுரை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு இன்று வெடித்தது. இதில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
மதுரை செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆவண அறையில் போலீஸார் கைப்பற்றிய வெடிகுண்டுகள் மற்றும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறையை நீதிமன்ற ஊழியர் ஒருவர் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் அந்த ஊழியர் காயமடைந்தார். அறையும் சேதமடைந்தது. வெடிகுண்டு சத்தம் நீதிமன்ற வளாகத்தையும் தாண்டி வீடுகள் இருந்த பகுதி வரை கேட்டது. பலத்த சத்தத்தினால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களும் அதிர்ந்தன. இந்தச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் வெடிக்கும் நிலையில் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது.
வழக்குகளுக்கு சாட்சியாக வெடிகுண்டுகளை வைக்கும்போது, அவற்றைச் செயலிழக்க வைத்தபின்னரே நீதிமன்ற ஆவண அறையில் வைப்பது வழக்கம். இங்கு அவ்வாறு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யாமல் வைத்திருந்தது ஏன் என்ற நோக்கில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications