பாலசிங்கம்- நார்வே தூதர் இன்று சந்திப்பு
லண்டன்:
நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் இன்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன்பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்துப் பேசுகிறார்.
கடந்த நவம்பர் 4ம் தேதி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ராணுவத் துறையை தன்வசம் எடுத்துக்கொண்டதால், அதிபருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
ராணுவத் துறையைத் திருப்பி ஒப்படைத்தால்தான் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்என்று ரணில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து அமைதி முயற்சியிலிருந்து தாற்காலிகமாகவிலகுவதாக நார்வே தூதுக் குழு அறிவித்தது.
அதிபருக்கும், பிரதமருக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நார்வே தூதர்எரிக் சோல்ஹைம் அண்டன் பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்துப் பேசுகிறார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில், புலிகளின் நிலைப்பாடு, இலங்கையில் அரசியல் நிலவரம் ஆகியவை குறித்துஇருவரும் விவாதிக்கிறார்கள்.
சுதந்திர தினம்: கருப்பு தினமாக அனுஷ்டிப்பு
இதற்கிடையே இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி 4ம் தேதியை, கருப்பு தினமாக அனுஷ்டிக்கப் போவதாகயாழ்பாணத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
அன்றைய தினம் யாழ்பாணத்தில் கருப்புக் கொடிகள் ஏற்றப்படும் என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.
தொடரும் சந்திரிகா- ரணில் மோதல்:
இந் நிலையில் நேற்றிரவு இலங்கைத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சந்திரிகா, எனது பதவிக்காலம் 2006ம்ஆண்டு வரை நீடிக்கும், அதிபர் பதவியில் நீடிப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் பொறுப்பு என்னைச்சேர்ந்தது என்று கூறியுள்ளார்.
இதற்கு இன்று பதிலளித்த ரணிலின் செய்தித் தொடர்பாளார் ஜி.எல்.பெரீஸ், சந்திரிகா தன் பதவிக்காலத்தைமேலும் ஓராண்டிற்கு நீட்டித்து எடுத்துக் கொண்ட ரகசிய பதவிப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications