போகி புகை: விமானப் போக்குவரத்து பாதிப்பு; டயர்களை எரித்த 65 பேர் கைது
சென்னை:
போகி பண்டிகையையொட்டி சென்னை நகரில் பழைய பொருட்களையும் டயர்களையும் எரித்ததாலும் மற்றும்பனி காரணமாகவும் ஏற்பட்ட மூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மக்கள் எழுந்து பழையபொருட்களை எரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேளங்களைக் கொட்டியும் பொங்கல் திருநாளை வரவேற்றனர். போகி பண்டிகையின்போது பழையன கழிதல்,புதியன புகுதல் என்ற பழமொழிக்கேற்ப வீட்டிலிருந்த பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தினர்.
பழைய பொருட்கள் என்ற பெயரில் டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், வீட்டருகே உள்ள குப்பைகூழங்களுக்கு தீ வைத்தனர். சென்னை நகரில் இது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
இதனால் சென்னையில் நகர் முழுவதும் புகை மூட்டமாக க்காணப்பட்டது. மேலும் அதிகாலைப் பனியுடன் சேர்ந்துகொண்ட இந்தப் புகை நகரை மூச்சு முட்டச் செய்தது. புகை மண்டலம் பரவி வானமும் புகை மூட்டமானது.
இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.புகை மூட்டம் குறைந்த பின்னர் தான் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
டயர்களால் தான் மிக அதிக புகை பரவுகிறது என்பதால், டயர்களை எரிக்க போலீசார் தடை விதித்திருந்தனர்.ஆனால், அதையும் மீறி நகரில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததாக 65 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications