கருணாநிதியை சந்தித்தார் வாசன்: தனது நிலையை தெளிவாக்கினார்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப்பேசினார்.
திமுக அணிக்கு காங்கிரஸ் வந்துவிட்டாலும், வாசன் மீது இன்னும் கருணாநிதி சந்தேகத்துடன் தான் உள்ளார்.
சமீபத்தில் மன்மோகன் சிங்குடன் வந்து கருணாநிதியை வாசன் சந்தித்தார். ஆனால், அடுத்த நாள் முரசொலியில்வாசன் இல்லாத வகையில் எடுக்கப்பட்ட படங்களே வெளியாகின. அவரை அதிமுக ஆதரவாளர் என்றேபெரும்பாலான திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை கருணாநிதியை வாசன் சந்தித்தார். அப்போது தனது நிலையை வாசன்தெளிவாக்கியதாகத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிஅமையும் வகையில் முற்போக்குக் கூட்டணியை அமைத்துக் காட்டியுள்ளார் கருணாநிதி. அதற்காக அவரைவாழ்த்தினேன். பொங்கல் நல் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி அபார வெற்றி பெறும் என்றார்.
ராஜீவ் கொலை: திமுகவுக்கு தொடர்பில்லை
இந் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கோ, திமுக தலைவர்களுக்கோதொடர்பில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ் இப்போது எப்படி திமுகவுடன் கூட்டணிஅமைக்கலாம் என்று பிரதமர் வாஜ்பாய் எழுப்பியுள்ள கேள்விக்கு, நிருபர்களிடம் பதிலளித்த பிரணாப் முகர்ஜி,
1999ம் ஆண்டு வெளியான ஜெயின் கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி கொலைக்கும், திமுகவுக்கும்தொடர்பில்லை என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை காங்கிரஸ் முழுமையாக ஏற்றுக் கொள்கிறதுஎன்றார்.
பா.ஜ.கவும் பல்டி:
ஜெயின் கமிஷன் அறிக்கையைக் காட்டி திமுக மீது பா.ஜ.க. குற்றம் சாட்டவில்லை என்று தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது காங்கிரஸ் குற்றம் சுமத்தியது. அதைக்காரணம் காட்டி மத்தியில் ஒரு அரசே கலைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்தது. இப்போது அதே திமுகவுடன்கூட்டணி அமைப்பது சந்தர்ப்பவாதம். இப் பிரச்சனையில் பா.ஜ.க. குற்றம் சாட்டுவது காங்கிரசைத்தான், திமுகவைஅல்ல.
திமுக மீது காங்கிரஸ் காங்கிரஸ் கூறியது உணர்ச்சிப் பூர்வக் குற்றச்சாட்டு.
356வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அதிமுக அரசைக் கலைக்க ஒருமுறைகூட கோரியதில்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டபோது திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் தலைமையில் கூடிய திமுகவினர் அதிமுக அரசைக் கலைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர்என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications