திருநாவுக்கரசரின் இல்லத்தில் பா.ஜ.க. தலைவர்கள் ரகசிய ஆலோசனை
சென்னை:
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படாவிட்டால், அடுத்து என்ன நடவடிக்கையில் இறங்குவதுஎன்பசு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனைநடத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுக, மதிமுக, பா.ம.க. கட்சிகள் விலகி முற்போக்குக் கூட்டணிஅமைத்துள்ளன.
இந்தக் கூட்டணியைச் சமாளிக்க அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் முடியும் என்ற நிலையில், தமிழகத்தில்தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். பல பா.ஜ.க. தலைவர்களும் கூக் குரல் எழுப்பியும் போயஸ் தோட்டத்தில்ஆழ்ந்த அமைதி நிலவுகிறது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ்பெர்னாண்டஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர் கூட்டணி பேச வரப் போவதாக பா.ஜ.கதரப்பில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அதிமுக இதற்கும் பதில் தரவில்லை.
இதனால் தமிழக பா.ஜ.கவில் படபடப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அதிமுகவும் கைகழுவி விட்டால், தமிழகத்தில்பாரதீய ஜனதா தனித்து விடப்படும்.
அத்தகைய நிலை ஏற்பட்டால், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விவாதிக்க பா.ஜ.க.தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திருநாவுக்கரசர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகிலஇந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன், ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாலர்கள் ராஜா, குமாரவேல்,லட்சுமணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்வது, கூட்டணி அமையாவிட்டால்எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications