"அத்து" விடுகிறது அதிமுக: தனித்து நிற்க தயாராகிறது பா.ஜ.க

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணி தொடர்பாக அதிமுகவிடமிருந்து இதுவரை ஒரு பதிலும் இல்லாததால், நாடாளுமன்றத் தேர்தலில்தமிழகத்தில் தனித்துப் போட்டியிட பாரதிய ஜனதாக் கட்சி தயாராகி விட்டது.

தேசிய ஜனநாயக முன்னணி தமிழகத்தில் கரைந்து போய் விட்டது. பா.ஜ.கவைத் தவிர மற்ற கட்சிகளான திமுக,மதிமுக, பாமக ஆகியவை தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறவுள்ளன.

எனவே அதிமுகவுடன் கூட்டணி சேரத் தயார் என்று பா.ஜ.க. அறிவித்தது. ஆனால் அதிமுக தரப்பில் இதுவரை ஒருபதிலும் வரவில்லை. இதனால் நேற்று பா.ஜ.கவின் தமிழக நிர்வாகிகள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின்இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட முதல்வர் ஜெயலலிதா, மார்கழியில் முடிவெடுக்க மாட்டார். தைபிறந்தால் தான் முக்கிய முடிவை எடுப்பார் என ஒரு அணி சொல்ல, அதெல்லாம் இல்லை, நிச்சயம் நம்மைநட்டாற்றில் விட ஜெயலலிதா முடிவு செய்துவிட்டார் என இன்னொரு கோஷ்டி கூறியுள்ளது.

வாஜ்பாயையே மீண்டும் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்துவதை ஜெயலலிதா விரும்பவில்லை என்பதாலேயே,பா.ஜ.கவின் கூட்டணி கோரிக்கைக்கு இதுவரை அவர் பதில் சொல்லாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வரும் 20ம் தேதிக்குப் பின்னரே கொளப்பாக்கம் அதிமுக நிர்வாகிகளுடனான நேர்காணல் நிகழ்ச்சியை முடிக்கிறார்ஜெயலலிதா. அதற்குப் பிறகே நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வாய் திறப்பார் ஜெயலலிதா என அதிமுகவினர்கூறுகிறார்கள்.

தற்போது அவர் வெறும் நேர்காணல் மட்டும் நடத்தவில்லை, ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய வேட்பாளரையும்மறைமுகமாக தேர்வு செய்து வருகிறார் என்கின்றனர்.

இதனால், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென, அதிரடியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து எதிர்க்கட்சிகளை அசத்துவார் அம்மா என்கிறார்கள் அதிமுகவினர்.

அதிமுகவின் அறிவிப்பைப் பொறுத்தே எந்த முடிவையும் எடுப்பது என்ற நிலையில் இருந்த பா.ஜ.கவினர் மத்தியில்இப்போது ஒரே பரபரப்பு. கடைசி நேரம் வரை காத்திருந்து, கழற்றிவிடப் பட்டால், முச்சந்தியில் நிற்கவேண்டிருக்கும் என்பதால் இப்போதே அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கானஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிப்பது என முடிவு செய்துள்ளனர்.

நேற்று நடந்த அக்கட்சியின் அவசரக் கூட்டத்தின்போது நாகர்கோவில், கோவை, புதுக்கோட்டை(திருநாவுக்கரசரின் தொகுதி) ஆகிய இடங்களில் நாம் தனித்து நின்றாலே வெல்ல முடியும் என ஒரு தரப்புகூறியுள்ளது. ஆனால், அது சாத்தியமில்லை என இன்னொரு தரப்பு தெரிவித்துள்ளது.

தனித்து தான் நிற்க வேண்டும் என்ற நிலை வந்தால், இந்த மூன்று தொகுதிகளிலும் நீலரிகியிலும் அதிக தீவிரம்காட்டுவது, மற்ற இடங்களில் ஒப்புக்கு வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தனித்து நின்றால் அதிமுக, திமுக கூட்டணிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை நாம் பிடிக்கலாம், நமதுதனிப்பட்ட பலத்தையும் அறிய இது நல்ல வாய்ப்பு என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர்,

அதிமுகவைப் பொருத்தவரை தனித்துப் போட்டியிடவே ஜெயலலிதா விரும்புவதாகத் தெரிகிறது.

கடந்த சட்டசபை இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அத்தனை தொகுதிகளையும் (சாத்தான்குளம்,அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடி, ஆண்டிப்பட்டி) வென்றதால் அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலையும்தனித்தே சந்திக்க ஜெயலலிதா விரும்புகிறார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+