ஜெயலலிதாவின் சொப்பன சாஸ்திரம்: சோ கிண்டல்
சென்னை:
துக்ளக் இதழின் ஆண்டுவிழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மைத்துனர்ராகவேந்தர் ஆகியோருடன் கலந்து கொண்டார். பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன், மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்ற இந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ, இன்றைய அரசியல்குறித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
இப்போது திமுக தலைமையில் ஏற்பட்டுள்ள கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்கானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஜெயலலிதா செய்த தப்பு, சோனியாவை வெளிநாட்டவர் என்று ஒனறரை ஆண்டுகளுக்கு முன்பே கூறியது தான்.
கடைசி வரை அதிமுக கூட்டணியை நம்பியே காங்கிரஸ் இருப்பது போல செய்திருக்க வேண்டும். ஆனால், நாம்சோனியாவைத் திட்டினால் காங்கிரஸ் தனியே நிற்கும், திமுக தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியிலேயே இருக்கும்,நாம் மூன்றாவது அணி அமைத்து வெல்லலாம் என்று ஜெயலலிதா நினைத்துவிட்டார்.
அந்த தைரியத்தில் தான் 40 சீட்களில் ஜெயிப்பேன். பிரதமர் ஆவேன் என்று கற்பனை கோட்டை கட்டினார்.ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு கானச் சொன்னார். ஆனால், ஜெயலலிதாவோ சொப்பன சாஸ்திரம் வழியாகஅரசியல் கால்குலேஷன் போட்டார்.
இது,ஜெயலலிதா குழப்பத்தில் இருப்பதையே காட்டுகிறது. தவறு செய்துவிட்டோமே என்று அவர் முழிப்பதாகநினைக்கிறேன். தப்பு செய்துவிட்டோம், அதை கரெக்ட் செய்ய 40 சீட்டிலும் தனியே போட்டியிடக் கூடும். அதுஎனக்குத் தெரியாது.
காவிரிப் பிரச்சனையில் ஜெயலலிதா அரசின் அணுகுமுறை தவறு, தலைமைச் செயலக மாற்றம் தவறு. ராணி மேரிக்கல்லூரி உள்பட எந்த கட்டடத்தைப் பார்த்தாலும் இடிக்க நினைப்பது தவறு. எதிர்க் கட்சிகளை துச்சமாக நடத்தியமுறை தவறு. சபாநாயகரை இவர் சொல்லும்படியெல்லாம் நடக்க வைத்தது தவறு. இதைச் சொல்வதால் என் மீதுஉரிமைப் பிரச்சனை கூட வரலாம்.
ஆட்சிக்கு வந்தால் வீரப்பனை பிடிப்பேன் என்றார். இஸ்ரேல் நிபுணர்கள் வருகிறார்களாம். அவர்களை வீரப்பன்கடத்திச் சென்றுவிடக் கூடாது.
அடுத்து அமைச்சர்களை மாற்றுவது ஜெயலலிதாவுக்கு ஒரு விளையாட்டாகவே போய்விட்டது. ஒரு அரன்சிலருக்கு முக்கிய பதவிகளைக் கொடுத்துவிட்டு மாற்றினால் அவனுக்கு புத்தி சரியில்லை என்று மகாபாரதத்தில்வரும்.
ஜனனி மீதான கஞ்சா வழக்கு எதற்கென்றே தெரியவில்லை. அதை ஒரு நீதிபதி கிழிகிழியென கிழித்தார் என்றார்சோ.
முன்னதாக வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் தந்தார். அவரது பதில்கள் விவரம்:
* வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனித்து நின்றால் கோவிந்தா தான். தனியே நிற்கச் சொல்வதேஉருப்படாமல் போகச் சொல்லும் யோசனை தான். அதிமுகவை குறையில்லாத ஆட்சி என்று சொல்ல மாட்டேன்.ஆனால், தீவிரவாதத்தை ஒடுக்க ஜெயலலிதாவால் தான் முடியும். இதனால் பா.ஜ.க-அதிமுக கூட்டணி வந்தால்ஓட்டு போடுவேன். அதே நேரத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.கவுக்கு தேசிய அளவில் பெரிய வளர்ச்சி ஏதும்கிடைத்துவிடாது.
* யானைகளுக்கு ஓய்வு வழங்கும் திட்டமாம். கோவிலில் யானைகளை யார் துன்புறுத்துகிறார்கள். நாளெல்லாம்சும்மா நிற்கிறது. அதுக்கு எதுக்கு ஓய்வு?. ஓய்வு தருகிறோம் என்று சொல்லி லாரியில் ஏற்ற, குத்தோ குத்து என்றுகுத்துவது தான் பாவம்.
* கமல் பட விஷயத்தில் தலையிட டாக்டர் கிருஷ்ணசாமி யார்?. இவர் என்ன டைரக்டரா?. வெட்டி ரகளைகளைஏற்படுத்துவது தேவையில்லாதது.
* இந்த வயதிலும் கருணாநிதி ஆற்றுகிற உழைப்பு, யாராலும் முடியாத ஒன்று.
* போன அதிமுக ஆட்சியில் இருந்த மாதிரி இப்போது ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் இல்லை என்று தான்நினைக்கிறேன். அடுத்த ஆட்சி வந்தால் தான் தெரியும். முன்பு தொட்டதில் எல்லாம் ஊழல். இந்த ஆட்சியில்ஜெயலலிதா நிறைய குட்டிக் கதைகள் சொல்கிறார். ரேடியோ மாமா மாதிரி ஆகிவிட்டது.
* கருணாநிதியைப் பொறுத்தவரை கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும்வகையில் அவர் ஏதும் செய்யவில்லை. அவரை எங்கே செய்ய விட்டோம். எல்லா பத்திரிக்கைளும் அவரைஆதரிக்கத் தானே செய்தன. இந்த விஷயத்தில் ஜெயலலிதா ரொம்ப ஓவராகப் போய்விட்டார். கொஞ்சம் கூடசகிப்புத்தன்மையே இல்லை என்றார்.
* கருணாநிதிக்குப் பின் தமிழகத்தில் எல்லோரும் எதிர்பார்க்கிற ஒருவர் (ரஜினி) அரசியலுக்கு வரலாம். நான்யாரையும் குறிப்பிடவில்லை. நீங்களாக யாரையாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல (பார்வையாளர்கள்மத்தியில் இருந்து ரஜினி, ரஜினி என்று குரல்). கடவுளின் திருவிளையாடல்படிதான் நடக்கும். நானே கூடஅரசியலுக்கு வரலாம். ஜெயலலிதா பி.எம். ஆக ஆசைப்படும்போது நான் ஏன் சி.எம். ஆக ஆசைப்படக் கூடாது?
* காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. அதே போல பா.ஜ.கவுடன் அதிமுகவும் கூட்டுவைக்க வேண்டும்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications