டெல்லியில் கடும் பனிமூட்டம்: சென்னையில் தரையிறங்கிய லண்டன், பிராங்க்பர்ட் விமானங்கள்
சென்னை:
லண்டனில் இருந்தும், பிராங்க்பர்ட்டில் இருந்தும் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விமானங்கள், அங்கு கடும்பனி மூட்டம் நிலவியதன் காரணமாக இன்று அதிகாலை சென்னையிலேயே தரையிறக்கப்பட்டன.
வட இந்தியா முழுவதும் கடும் குளிரும், பனியும் வாட்டி வருகிறது. கடும் குளிருக்கு இதுவரைநூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். சில மீட்டர் தூரத்தில் இருக்கும் வாகனங்கள் கூட தெரியாதஅளவுக்கு காலை 10 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது.
இதனால் விமான, ரயில், பஸ் போக்குவரத்துகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் லண்டனில் இருந்து டெல்லி வந்த லுப்தான்ஸா விமானமும், பிராங்க்பர்ட்டில் இருந்து டெல்லிசென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் இந்திய வான்வெளியில் இருந்தபோது, டெல்லி பனிமூட்டம் குறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தால் தகவல் தரப்பட்டது.
அங்கு தரையிறங்குவது சாத்தியமில்லை என்பதால் சென்னையில் தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்ட.இதையடுத்து அந்த இரு விமானங்களும் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில்தரையிறக்கப்பட்டன.
அதிலிருந்த 722 பயணிகளுக்கும் அவசரமாக இமிக்ரேசன் கிளியரன்ஸ் தரப்பட்டது. பின்னர் அவர்கள்சென்னையின் பல்வேறு ஹோட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டனர். டெல்லியில் பனிமூட்டம் குறைந்த பின் இந்தவிமானங்கள் மீண்டும் கிளம்பும்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications