நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி: ஜெ. முடிவு
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 100 சதவீத வெற்றியைப் பெறும். அதற்கேற்ற வகையில் தொண்டர்கள்கடுமையாக உழைக்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதாவிடுத்துள்ள அறிக்கை:
இன்று நடப்பது எம்.ஜி.ஆர். ஆட்சி. இந்த ஆட்சியே அமரர் எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் காணிக்கையாகும். எம்.ஜி.ஆர். பிறந்த தினத்திற்கு ஈடாக இந்தியாவில் வேறு எந்த தினத்தையும் கூற முடியாது. எம்.ஜி.ஆர். என்றபெயரைக் கேட்டாலே இனிக்கும், நினைத்தாலே இனிக்கும்.
எம்.ஜி.ஆர். நிகழ்த்திக் காட்டிய அரசியல் புரட்சிக்கு ஈடாக எந்தப் புரட்சியும் இந்தியாவில் நடைபெற்றதில்லை.அதிமுகவுக்கு நிகரான இயக்கமும் இன்று எதுவும் இல்லை.
முளைத்தபோதே, வானைப் பிளந்து வளர்ந்த விருட்சம் அதிமுக. அரசியல் புரட்சி மட்டுமல்லாது அன்புப்புரட்சியையும் நிகழ்த்தியவர் எம்.ஜி.ஆர்.
கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக செய்துள்ள சாதனைகள், 30 ஆண்டு கால சாதனைகளுக்குச் சமம்.நாடாளுமன்றத்தில் நமது கோரிக்கைகள் ஒரே குரலில் ஒலித்தால்தான் உரிமைகளை முழுமையாகப் பெற முடியும்.
எம்.ஜி.ஆன் நல்லாட்சி தொடர, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 100 சதவீதம் நம்மவர்களே(அதிமுக) வெற்றி பெற வேண்டும். 100 சதவீதம் நம்மவர்களே (அதிமுக எம்.பிக்களே) நாடாளுமன்றம் செல்லவேண்டும். அதற்கேற்ற வகையில், கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் கடுமையாகப் பாடுபடவேண்டும் என்று கூறியுள்ளார்.
100 சதவீதம் நம்மவர்களே நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஜெயலலிதாவின் இந்த அறிக்கை,வரும் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள்ளதாக அரசியல்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக மீது கடும் தாக்கு:
ஜெயலலிதாவின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, முடிந்தவரை ஆதாயம் தேடிவிட்டு தேர்தல் வந்தவுடன்கூட்டணியைவிட்டு விலகியுள்ளார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழகத்துக்கு என்ன நன்மைசெய்தது?. திமுக சார்பில் மத்தியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் வெறும் உருவப் பொம்மைகளாகத் தான்இருந்தார்கள். அவர்களால் ஒரு பயனும் இல்லை.
வரும் தேர்தல் தீயில் இந்த உருவப் பொம்மைகள் அரசியல் சாம்பலாகி, அநாயமதேயங்களாக மாறுவார்கள்என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications