மைசூர் கோவிலுக்கு வந்தபோது பாதுகாப்பு தந்தோமே: ஜெ மனுவுக்கு கர்நாடகம் பதில்
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரித்தால்அவருக்கோ, கர்நாடக தமிழர்களுக்கோ எந்தப் பிரச்சனையும் வராது என உச்ச நீதிமன்றத்திடம் கர்நாடக அரசுகூறியுள்ளது.
இந்த தனி நீதிமன்றத்தை பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. காவிரி, வீரப்பன் விவகாரங்களால் ஏற்கனவே கர்நாடக- தமிழக உறவு சீர்கெட்டுள்ள நிலையில்பெங்களூரில் இந்த வழக்கை விசாரித்தால் பிரச்சனை ஏற்படும் என அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த மனுவுக்கு கர்நாடகம் இப்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், பெங்களூர் வரும்ஜெயலலிதாவுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், பெங்களூரில் விசாரிப்பதால் எந்தப் பிரச்சனையும்உருவாகாது எனவும் கர்நாடக அரசு கூறியுள்ளது.
மேலும் தனி நீதிமன்றத்தை அமைத்துவிட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள கர்நாடகம், உச்ச நீதிமன்றம் விரும்பினால்வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை எனவும்தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை நியாயகமாகவும், நேர்மையாகவும் நடத்துவோம். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதுகுறித்து எங்களுக்குக் கவலையில்லை. அதில் எங்களுக்கு ஆர்வமும் இல்லை. உச்ச நீதிமன்றம் சொன்னதற்குகட்டுப்பட்டு நீதிமன்றத்தை அமைத்து விசாரிக்கத் தயாராக இருக்கிறோம் எனவும் கர்நாடக அரசு தனது மனுவில்கூறியுள்ளது.
கர்நாடகத்தில் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது சரியல்ல. சமீபத்தில் அவர்மைசூர் சாமூண்டீஸ்வரி கோவிலுக்கு வந்து சென்றபோது நாங்கள் உரிய பாதுகாப்பு தந்தோம். அதே போல அவர்வழக்கு விசாரணைக்கு வரும்போதும் பாதுகாப்பு தருவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தமிழில் உள்ள ஆவணங்களை கன்னடத்துக்கு மொழி பெயர்க்கும் வேலையும் நடந்துவருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications