கருணாநிதியுடன் சோனியா மீண்டும் தொலைபேசியில் பேச்சு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீண்டும் தொலைபேசியில் பேச்சுநடத்தினார்.
புத்தாண்டன்று இருவரும் நடத்திய முதல் தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து காஙகிரஸ்-திமுக கூட்டணிஉருவானது. இந் நிலையில் கருணாநிதியை மீண்டும் தொடர்பு கொண்ட சோனியா, அவருக்கு பொங்கல் வாழ்த்துத்தெரிவித்தார்.
இதையடுத்து இருவரும் கூட்டணி, இடங்கள் பகிர்வு குறித்தும் ஆலோசனை நடத்தினர். கூட்டணியில்பா.ம.கவையும் இழுத்ததற்கு கருணாநிதிக்கு சோனியா வாழ்த்தும் தெரிவித்தார்.
நல்லகண்ணு சந்திப்பு:
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும் கருணாநிதியைச் சந்தித்துகூட்டணி குறித்துப் பேசினார்.
வரும் 21ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன், கருணாநிதியை சந்தித்துஇடங்கள் பகிர்வு குறித்து பேச்சு நடத்துவார் என நல்லகண்ணு பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சோனியா- மாயாவதி, சரத்பவார் சந்திப்பு:
இந் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்சரத்பவாரையும் சோனியா காந்தி டெல்லியில் நேரில் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசினார்.
காங்கிரசுடன் கூட்டணிக்கு சரத்பவார் முன் வந்துள்ளார். ஆனால், அவரது கட்சியின் இன்னொரு முக்கியதலைவரான சங்மா, காங்கிரசுடன் கைகோர்ப்பதை விரும்பவில்லை. இதனால் அந்தக் கட்சி உடையும் நிலைஉருவாகியுள்ளது.
அதேபோல மாயாவதியை சோனியா சந்தித்த சிறிது நேரத்தில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ்நக்வியும் சந்தித்து கூட்டணி பேசினார். உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியைக் கவிழ்த்த பின் பா.ஜ.க. மூத்ததலைவர் ஒருவரை அவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
காங்கிரசுடன் கைகோர்க்கத் தயாராக உள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முதல்வருமான முலாயம் சிங்,அதே நேரத்தில் மாயாவதி- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் நான் கூட்டணியில் இருந்து விலகிவிடுவேன் என்றுகூறியுள்ளார்.
இதனால், மாயாவதியைப் பிரித்து எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. முயன்று வருகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications